தேர்வறையில் ஓர் திடீர் காதல்

127 34 82
                                    

தேர்வறை திறக்கும் முன்னே
தேடி வந்து காத்திருப்பேன்
உன் பின்னே என் இருக்கை
அமைந்துவிட இன்புறுவேன்.

எழுதுகோல் எடுத்து வர
வேணுடுமென்றே மறந்திடுவேன்.
இரண்டிருக்கும் உன்னிடம்
இரவல் தருவாய் என்னிடம்.

காகிதம் நிறப்பிட வார்த்தைகள்
ஆயிரம் இருக்குது மொழியிடம்
இருந்தும் உன் பெயர் எழுதவே
கைகள் என்னைப் பணித்திடும்
காதல் கண்ணை மறைத்திடும்
தெரிந்த பதில் கூட மறந்திடும்

நீ தேர்வெழுதி முடிக்கும் வரை
நேரத்தைக் கடன் வாங்கிக் காத்திருப்பேன்
ஒற்றைக் காகிதம் கூட நிரப்பாமல்
கண்காணிப்பாளர் என்னை
வசைபாடி கடந்து செல்வார்
உனக்கெல்லாம் நூல் எதற்கு என்றபடி

தேர்வு முடிவுகளும் வந்துவிடும்
தேர்ச்சி பெருவாய் நீயதில் முதலிடம்
காதலைப் போல தேர்விலும் - நான்
தோற்றுப் போவேன் திரும்பவும்.

அவளும் நானும்Donde viven las historias. Descúbrelo ahora