நெடுஞ்சாலை ஒன்றில் நீண்ட தூரப் பயணம்...
நிலவொளியில் நீயும் நானும்...
கை கோர்த்து நடந்து சென்றோம்...
கால் வலிப்பதாக நீ பாசாங்கு செய்தாய்...
நொடிப் பொழுதில் நான் உன்னை தூக்கி நடந்தேன்...
மனம் மயக்கும் உன் கண்களால் இமை மூடாது எனைப் பார்த்து...
அலுங்காமல் உன் இதழ் வழியே புன்னகை பூத்தாய்...
நிலவின் ஒளியில் உன் கண்கள் மிளிரும் வைரமானது...
உன்னை ஏந்தி நிற்கும்
என் கரங்களுக்கோ பிறவிப்பயன் பெற்றதாய் ஓர் உணர்வு...உன் நெஞ்சில் கை வைத்து என் நெஞ்சில் காதை வைத்து இதயத்துடிப்பை ஒப்பிட்டுப் பார்த்தாய்...
இந்த இரவு இப்படியே நீளாதா..?
'படைத்தவன் அந்த விடியலுக்கும் வார விடுமுறை கொடுத்திருக்க வேண்டும்' என
எனக்குள் நானே எண்ணிக் கொண்டேன்...