வழக்கமான பேருந்துப் பயணத்தில்
ஜன்னலோரம் இருக்கையில் அமர்ந்து இயற்கையை ரசித்தவள்..இறுகப் பற்றிய என் கரங்களோடு - தன்
இமை மூடி பெரு மூச்செறிந்து பின்
எனை நோக்கி...இறுதி வரை தொடர வேண்டும் இப்பயணம்
என இதழ்மூடி இமை திறந்தவள் கண்களாலே கேள்வி கேட்க...கன்னித்தீவாய் நம் காதல் பயணம்
இறுதிவரை தொடருமென
இதழ் மூடிய புன்சிருப்பில் மூடித்திறந்த என்
இமைகளால் நானும் பதில் கூறினேன்...