5. பை

2.2K 88 4
                                    

கையில் பையை தாங்கிக்கொண்டு அருகிலிருந்த கழிவறை நோக்கி நடந்தாள் தீபா. பயணிகள் கூட்டமாக அங்குமிங்கும் சென்றவாறு இருந்தனர். ஆண்கள், பெண்களென இரு கழிவறைக்கு மத்தியில் ஒரு மேசை, நாற்காலியிட்டுக்கொண்டு அமர்ந்தவாறு ஒருவன் பயணிகளிடம் கட்டணம் வசூலித்துக்கொண்டிருந்தான். அவனருகே சென்றவள்.

"அண்ணே டாய்லெட் போணும் எவ்வளவு?"

"யூரின் னா ரெண்டு  ரூபா, டூ பாத்ரூம் அஞ்சு ரூபா..."

கையில் பையோடு உள்ளே செல்ல சிரமமாக இருந்தது. யாரிடம் கொடுத்துவிட்டு செல்லவும் மனம் சம்மதிக்கவில்லை.

" அண்ணே இந்த பேக் வைக்கிறதுக்கு ஏதும் இடம் இருக்கா?"

"இங்க கீழ வச்சிட்டு போமா, வந்து எடுத்துக்கோ."

மீண்டும் யோசித்தாள் மனம் ஒருநிலையில் பதில் சொல்லாமல் கிறங்கடித்தது. பிறகு அங்கேயே வைத்துவிடலாமென குனிந்து கீழே அவனருகில் வைத்தாள். நிமிர்ந்தபோது கழிவறையருகே ஒரு பெண் கையில் ஒரு சிறிய குழந்தையுடன் நின்று கொண்டிருப்பதை கவனித்தாள். அவன் மீது நம்பிக்கை குறைவால் மனம் அவளிடம் தாவிச்சென்றது. பெண்ணுக்கு பெண் தான் சரியான உதவியாய் இருக்கமுடியுமென நினைத்திருப்பாள். குடும்ப பெண்ணாக தெறிகிறாளே. கீழே வைத்த பையை மீண்டும் தூக்கிக்கொண்டு அவளருகே சென்றாள்.

"அக்கா... ஒரு 2 நிமிஷம் இந்த பேக்க வச்சுருப்பீங்களா டாய்லெட் போயிட்டு வந்திடுறேன்..." என்றாள்

"சரி மா வச்சிக்கிடுறேன், நீ போயிட்டு வா மா" என்றாள் அந்த குடும்பப் பெண்

"ரொம்ப தேங்க்ஸ் கா..." என்று புன்னகைத்தாள், பின் அவனிடம் சென்று கட்டணத்தைக்  கொடுத்துவிட்டு உள்ளே சென்றாள். ஏதோ ஒரு அவசரத்தில் சிறுநீர் கழித்தும் கழியாமலும் முடித்துவிட்டு ஆடையை சரிசெய்து கொண்டு வெளியே வேகமாக வந்தாள்.  

அந்த பெண்ணை பார்த்தால் ஏமாற்றுபவள் மாதிரி தெரியவில்லை, கையில் குழந்தை வேறு இருக்கிறது, எங்காவது அருகில் சென்றிருப்பாள். இல்லையென்றால் கழிவறையினுள்ளே  சென்றிருப்பாள். ஒரு வேளை பையை  மறந்து எடுத்து சென்றிருக்கலாமோ. அவள் நல்லவளாகவே தெரிந்தாள் அதுவும் அவளொரு குடும்பப் பெண் இது எப்படி சாத்தியம். என்ன நடக்கிறது இங்கே, அந்த பெண்ணை காணவில்லை அவள் முதலில் நின்ற இடத்தில்.  வெளியே வந்து அதிர்ச்சியிலுறைந்த தீபாவின் எண்ண ஓட்டங்கள் இவை. அவள் உடல் பதற்றத்தில் நடுங்க ஆரம்பித்தது.

ஓர் இரவு பயணம்Where stories live. Discover now