9. மாற்றம்

1.7K 84 10
                                    

அவனை அங்கு இறக்கி விட்டவுடன் ஆட்டோ ஓட்டுனர் அங்கிருந்து கிளம்பினான். கீழே இறங்கிய அவன் தீபாவையும் அடையாளம் கண்டு கொண்டான். இவள் எப்படி இங்கு வந்தாள் என்று மனதிற்குள் ஒன்றும் புரியாமல் குழம்பினான். அவளும் என்ன செய்வதென்று அறியாமல் திகைத்துப் போய் நின்றாள். அவனைக் கண்டதும் ஒன்றிடமிருந்து தப்பித்துக் கொள்ள மற்றொன்றில் சிக்கி விட்டது போல் அவள் அப்போது உணர்ந்து கொண்டிருந்தாள்.

" டேய் ஆதி அண்ணன்டா..." மூன்று பேரில் ஒருவன் மற்றவர்களிடம் எதோ ஒரு அச்சத்தில் கூறினான்.

" நல்லா மாட்னோம்..."

" இந்நேரத்துல இங்க எண்ணடா பண்ணிட்டு இருக்கேங்க. இந்த பொண்ண உங்களுக்கு தெரியுமா எதுக்கு வேகமா ஓடி வந்தா? " தன் கம்பீரக் குரலில் பேசினான் அவன்.

என்ன சொல்வதென்று அறியாமல் ஒன்றும் பதிலழிக்காமல் விழி பிதுங்கி நின்றனர்.

" என்னடா பிரச்சின ஒண்ணும் பேசாம நிக்குறேங்க "

" அது... வந்து... இந்த பொண்ணு நம்ம ஏரியா பக்கம் எதையோ திருடிட்டு ஒடுனாண்ணே அதான் துரத்திட்டு வந்தோம். " மழுப்பினார்கள்.

" அய்யோ பொய் சொல்றாங்க அவங்க... அவங்க என் பின்னால த்த்த த்த தப்பு தப்பா பேசிட்டு வந்தாங்க. என்ன பண்ணனு தெரியல தனியா இருந்தேன் வேற வழி தெரியாம ஓடுனேன் அவங்க என் பின்னாலயே தொரத்திட்டு வந்தாங்க நான் நான் எந்த த்த த்தப்பும் பண்ணல என்ன காப்பாத்துங்க " திக்கல் தொண்டைக் குழியில் வார்த்தைகளை அடைத்திருக்க பேசிக் கொண்டே அழத் தொடங்கினாள்.

" என்னங்கடா நடக்குது? குடிச்சிருக்கேங்களா? எதுக்குடா துரத்துனேங்க? உங்க மேல இருக்குற கேஸல்லாம் பத்தாத அடுத்து பொம்பள கேஸுலயும் உள்ள போணுமா? "

" அண்ணே அதொண்ணும் இல்லணே அவ பொய் சொல்றா..."

" என்னடா பொய் சொல்றா. நீங்க ரொம்ப உத்தமனுங்களா? எத்தன தடவ சொல்லிருக்கேன் இந்நேரத்துல வெளிய சுத்திட்டு இருக்காதேங்கனு எத்தன தடவா பட்டாலும் புத்தி வராதா. இனி ஒருக்க பிரச்சின போலீஸ் ஸ்டேசன்னு எங்கிட்ட வராதேங்க. டேய் சுரேசு உங்கண்ணன் கிட்ட சொல்லணுமா? "

ஓர் இரவு பயணம்Dove le storie prendono vita. Scoprilo ora