தீபாவின் தாய் தரையில் கீழே உடல் பதிந்த வாறு படுத்து கிடந்தாள். அவள் தந்தை மறு புரம் ஷோஃபா வில் கண் மூடியவாறு சாய்ந்து கிடந்தார். தன் கையை நெஞ்சில் வைத்து அழுத்திய படியே படபடப்புடன் மெதுவாக அவர்களருகில் சென்றாள் தீபா. சுற்றிலும் காதடைத்தது போல் ஒரு அமைதி நிலை பரவியிருந்தது. கிட்டே சென்று தன் தாயின் கை மேல் தொட்டு பார்க்கும் கணப்பொழுதில் உள் அறையிலிருந்து " அக்கா.... " என்று கேட்ட ஒரு சத்தத்தில் குலை நடுங்கிப் போனாள் தீபா. அவள் தம்பி அவளை கண்டு விட்டான். அவன் எழுப்பிய ஒலியில் அழுது அழுது சோர்ந்து போய் உறக்க நிலையில் கிடந்த அவள் தாய் சிவகாமி கண்விழித்து இவளை திரும்பி பார்த்த பிறகே பாதி தூரம் சென்று விட்ட அவள் உயிர் திரும்பி வந்தது. ஒன்றும் புரியாத சிவகாமி சட்டென சப்தமாக அழத் தொடங்கி விட்டாள். அவள் அழுகையின் இரைச்சல் தீபாவின் தந்தையையும் எழுப்பி விட செய்தது.
அழுகையுடன் எழுந்து தீபாவை நோக்கி ஓடி வந்த சிவகாமி அவளை தன் கையால் அவள் தோள்களை நோக்கி அடிக்க தொடங்கினாள்.
" ஏன்டி இப்படி பண்ண... நாங்க உனக்கு என்னடி குறை வச்சோம்... பாவி.... "
" அம்மா என்ன மன்னிச்சிரு மா... " அதற்கு மேல் எதுவும் வார்த்தை வராமல் தீபாவும் அழத் தொடங்கினாள்.
எழுந்து வந்த அவள் தந்தை.... " ஓடு காலி நாயே இப்ப எதுக்கு டி திரும்பி வந்த... நாங்க இருக்கமா இல்ல செத்துடமானு பாக்க வந்தியா.... "
" அப்பா அப்டிலாம் இல்லப்பா ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்கப்பா... "
" இன்னும் கொஞ்சம் லேட்டா வந்திருந்தா எங்க பொணத்த பாத்து சந்தோஷப் பட்டிருக்கலாம் டி.. " என்றாள் சிவகாமி.
VOUS LISEZ
ஓர் இரவு பயணம்
Mystère / Thrillerஏதோ ஒரு காரணத்தினால் தன் வீட்டை விட்டு வெளியேறிய ஒரு இளம் பெண் அந்த ஒரு நாள் இரவு சந்திக்கும் பிரச்சினைகள், போராட்டங்கள், முடிவில் அவள் என்ன ஆனாள் என்பதே இக்கதை. கொஞ்சம் விறுவிறுப்பு, திகில் நிறைந்து இக்கதையை எழுத முயற்ச்சி செய்திருக்கிறேன். படித்த...