12. நிஜம்

2.3K 112 47
                                    

அங்கிருந்த உறவினர் கூட்டத்தில் அப்பெண்ணிடம் எதுவும் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை . அப்பெண்ணும் தீபாவை காணும் போதெல்லாம் எதோ ஒரு குற்ற உணர்ச்சியோடு தலைகுனிவாகவே சென்றாள். தீபாவும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாமலே இருந்தாள். இரவில் இரு மண வீட்டார்களும் ஒன்றாக இருந்து உணவருந்தினர். கடைசியில் ஒரு வழியாக அப்பெண் தானாகவே தீபா அருகில் வந்தாள்.

" தீபா... உங்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்.. "

" ம்ம் இங்க எப்படி இவ்ளோ கூட்டம் இருக்கே.... " எப்படியாவது தன் நகைகளை வாங்கி விட வேண்டுமென்ற நோக்கமே அவளிடமிருந்தது.

" எல்லாரும் கொஞ்சம் கொஞ்சமா கெளம்பிடுவாங்க. நீ ஒரு பத்து நிமிசம் வா ஓரமா போயி உக்காந்துக்கலாம். யாராது வந்தா நா சமாளிச்சிக்குறேன்... "

" சரி வரேன்... "

" உங்க அக்கா கிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு வரவா... " அருகில் இருந்த தன் நாளைய கணவனிடம் கேட்டாள்.

" சரிமா போ... " என்றான்.

பிறகு இருவரும் சற்று ஒதுங்கி போய் அமர்ந்து பேசினர். அவ்வப்போது குழந்தைகள் அங்குமிங்கும் வந்த வண்ணம் இருந்தனர்.

" என்ன மன்னிச்சரு தீபா... நா பண்ணினது பெரிய தப்பு... "

" என்னோட நகை எங்கே? " வேறெதுவும் அவள் கேள்வியாய் இருக்கவில்லை.

" அது இல்ல தீபா... நகை... "

" என் நகைய கொடுத்துருங்க ப்ளீஸ்.... "

" நா சொல்றத கொஞ்சம் கேளு தீபா.... "

" நீங்க ஏன் எடுத்தேங்கனுலாம் நா கேக்கல. நா உங்கள மன்னிச்சிடுறேன். ஆனா என் நகைய மட்டும் கொடுத்துருங்க கெஞ்சி கேட்டுக்குறேன். "

" என்ன கொஞ்சம் பேச விடு தீபா. நகை எங்கிட்ட இல்ல... "

" என்ன சொல்றேங்க. விளையாடாதீங்க . இது என்னோட வாழ்க்கை.... "

" நா என்ன நடந்துதுனு சொல்றேன். அன்னைக்கு நானும் என் ஹஸ்பன்டும் உன் கல்யாணத்துல கலந்துக்கறதுக்காக தான் என் சித்தி வீட்டுக்கு வள்ளியூர் புறப்பட்டு வந்தோம். வந்த வழில தான் நீ உன் பேக்க கொடுத்த.  நீ கொடுத்துட்டு போன பேக்க என் கைல வச்சு ஆட்டிட்டு இருந்தப்போ உள்ளருந்து ஜில் ஜில்னு சத்தம் வந்துச்சு. மனசு தொறந்து பாக்க சொல்லுச்சு. பாத்தா உள்ள எல்லாம் நகைங்க. அந்த நிமிசம் எனக்குள்ள அப்படியொரு கெட்ட எண்ணம் தோணிருச்சு. என் புருஷன் கிட்ட போனேன் அவரும் ஒரு ஆசைல எடுத்துட்டு போயிடலாம்னு சொன்னாரு. அப்புறம் தான் திரும்ப மதுரைக்கே கொண்டு போயி எங்க வீட்ல வச்சிடலாம்னு மதுர பஸ்ல ஏறினோம். ஆனா நீ மதுர வருவ எங்கள பாப்பனு நாங்க நெனச்சு பாக்கல.

ஓர் இரவு பயணம்Wo Geschichten leben. Entdecke jetzt