அவர்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த தீபா, முகத்தில் கை வைத்து புதைத்த படி செய்தவறியாது நின்றாள். பின் நேராக தான் முன்பு நின்று கொண்டிருந்த கடையினருகே வந்தாள்.
"என்னம்மா பேக் கிடச்சிதா?"
"இல்லண்ணே அந்த பொம்பள நான் வந்த பஸ்ல ஏறி போயிடுச்சுணே..."
"என்ன சொல்றமா நீ ஏன்மா உன் பஸ்ல போவல?"
"அவள வெளிய தேடிட்டு இருந்தேன்ணே எங்கயும் காணல அதான் நான் வந்த பஸ்ல பாக்காம உட்டுட்டேன். இப்போ என்ன பண்றதுனே தெரியலணே. பக்கத்துல போலீஸ் ஸ்டேசன் எதும் இருக்குதா?"
" இப்போ மணி ராத்திரி ரெண்டாகுது இப்போ போலீஸ் ஸ்டேஷன் போயி என்னமா பண்ண போற அதும் ஒரு பொம்பள தனியா இருக்கேனு வேற சொல்லுற அப்படியே பணத்த கண்டு பிடிச்சாலும் உன் கைக்கு வருமானு கஷ்டம் தான்"
" இப்போ என்னணே பன்றது" மீண்டும் அழத் தொடங்கினாள்.
"அழாத மா... உன் சொந்தக்காரங்க யாராது இருக்காங்களா பக்கதுல? உனக்கு எங்கமா போணும் மதுரயா? உன் ஊட்டுக்கு போன் பண்ணி சொல்லுமா"
" இல்லண்ணே யாரும் பக்கத்துல இல்ல. வீட்ல பணம் தொலஞ்சு போனது தெரிஞ்சா ரொம்ப கஷ்டம் அண்ணே. வேற எதாவது பண்ண முடியுமா?"
"வேற என்னத்தம்மா இப்போ பண்றது. ம்ம் சரி நீ ஒண்ணு பண்றியா? அந்த பஸ் இப்போ மதுரைக்கு தான போவுது எப்புடியும் அங்க ஒரு பதினஞ்சு நிமிசமாது நிக்கும் அதுக்குள்ள நீ அங்க போயிட்டா அவள பாத்துருலாம். அங்க பஸ் ஸ்டான்ட்ல போலீஸ் காரங்க நிப்பாங்க அவங்கள கூப்டு போயி பேக்க வாங்கிடுமா."
" இப்ப எப்பிடி போறதுண்ணே?"
"என்னம்மா அறியா புள்ளையா இருக்கியே இங்க நிக்குற பஸ் எதாது மதுரைக்கு போகும் அதுல சீக்கிரம் போயி ஏறு. அந்த பஸ் கெளம்பி பத்து நிமிசம் கூட இருக்காதுலா அப்போ சீக்கிரம் போ பிடிச்சிரலாம். கடவுள் மேல பாரத்த போட்டுட்டு போ மா ஓடி."
"சரிண்ணே.. நான் போறேன் ரொம்ப தேங்க்ஸ் அண்ணே"
"கைல காசு எதாது வச்சிருக்கியாமா.."
YOU ARE READING
ஓர் இரவு பயணம்
Mystery / Thrillerஏதோ ஒரு காரணத்தினால் தன் வீட்டை விட்டு வெளியேறிய ஒரு இளம் பெண் அந்த ஒரு நாள் இரவு சந்திக்கும் பிரச்சினைகள், போராட்டங்கள், முடிவில் அவள் என்ன ஆனாள் என்பதே இக்கதை. கொஞ்சம் விறுவிறுப்பு, திகில் நிறைந்து இக்கதையை எழுத முயற்ச்சி செய்திருக்கிறேன். படித்த...