தீபா பின்னால் ஓடி வருவதைக் கண்ட அவர்களும் நடையில் வேகம் கூட்டி ஓடத் தொடங்கினர். மக்களின் கூட்டம் ஆங்காங்கே வந்தும் போயிமாய் இருந்ததில் ஒவ்வொருவரையும் கையால் விலக்கி விட்டுக் கொண்டே ஒடினாள். அவர்கள் மக்கள் அதிகமாய் இருந்த இடத்திற்குள்ளே நுழைந்து ஓடினர். அவள் வந்துகொண்டிருந்த வழியில் எதோ ஒரு சலசலப்பு மக்கள் கூட்டமாக சூழ்ந்திருந்தனர். அதில் அவள் வேகம் தடைப்பட்டு நின்றாள். அங்கே யாரோ ஒருவர் மயங்கி விழுந்துவிட்டதாக பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அக்கூட்டத்தை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு உள்நுழைந்து தலைமறைவாயினர். மயிரழையில் அவர்களை தவறவிட்டு விட்டு மீண்டும் சுற்றும் முற்றும் நோக்கினாள் எங்கேயும் தென்படவில்லை. அந்த சுற்றுப்புறங்களில் இன்னும் அதிகமாக தேடினாள் பலனில்லை. தன் செருப்பு முழுவதுமாக அருந்ததே மிச்சம். கோவத்தில் அதை எடுத்து வேகமாக வீசினாள். அது அங்கே பிளாட்பார ஓரத்தில் படுத்திருந்த பிச்சைக்கார முதியவரின் நெஞ்சின் மீது பலமாக தாக்கியது. அய்யோ என பதறிக் கொண்டே அவரருகே ஓடி வந்தாள். ஒன்றுமே அறியாதவராய் தன் நெஞ்சை தடவிக்கொண்டிருந்தார்.
"ரொம்ப சாரி தாத்தா தெரியாம உங்க மேல விழுந்துட்டு." அவர் அவளை பார்த்துக் கொண்டே பதிலேதும் பேசாமல் தடவிக்கொண்டே இருந்தார்.
"ரொம்ப வலிக்குதா தாத்தா..." பதில் பேசவில்லை பரவால போமா என்பது போல் கையால் சைகை செய்தார்.
"அய்யோ இப்படி பண்ணிட்டனே" என்று தலையில் கைவைத்துக் கொண்டே பார்வையை கீழே தளர்த்தினாள். அங்கே அந்த குழந்தையின் தொப்பி கிடந்தது.
"அந்த பாப்பா தொப்பி.. " என்று குனிந்து கையிலெடுத்துக் கொண்டே அங்கே நோட்மிட்டாள்.
"தாத்தா... இந்த தொப்பி எப்படி இங்க வந்துச்சுனு தெரியுமா?" முதலில் அவரெதுவும் பேசவில்லை.
"தாத்தா.... " என்றாள். மௌனமே பதிலாய் வந்தது. பிறகு எந்த பதிலும் கிடைக்குமென அவளுக்கு நம்பிக்கை இல்லை. அடித்து விட்டோமே என மனம் வருத்தி கையில் மிச்சமிருந்த நூறு ரூபாயை அவரருகே வைத்து விட்டு அங்கிருந்து செல்ல முயன்றாள்.
YOU ARE READING
ஓர் இரவு பயணம்
Mystery / Thrillerஏதோ ஒரு காரணத்தினால் தன் வீட்டை விட்டு வெளியேறிய ஒரு இளம் பெண் அந்த ஒரு நாள் இரவு சந்திக்கும் பிரச்சினைகள், போராட்டங்கள், முடிவில் அவள் என்ன ஆனாள் என்பதே இக்கதை. கொஞ்சம் விறுவிறுப்பு, திகில் நிறைந்து இக்கதையை எழுத முயற்ச்சி செய்திருக்கிறேன். படித்த...