'பயணிகளின் கணிவான கவனத்திற்கு.. வண்டி எண்: 12661 சென்னை எழும்பூரில் இருந்து தென்காசி வழியாக செங்கோட்டை வரை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் 10 நிமிடங்கள் தாமதமாக 9 மணி 20 நிமிடங்களுக்கு இரண்டாவது ப்ளாட்ஃபார்மிலிருந்து புறப்படும்' என்ற பதிவு குரல் ஒலித்தது..
'ஓ காட்.. வீட்லயிருந்து எஸ்க்கேப்பாகி வரதுக்குள்ள ஒருவழி ஆகிடுச்சு.. இந்த ட்ரெயின் வேற 10 மினிட்ஸ் லேட்டா..! ச்ச..' என்று புலம்பியவாறு ட்ராவல் பேகை சீட்டுக்கு அடியில் வைத்துவிட்டு side lowerரில் அமர்ந்தாள் மதுவர்ஷினி..
'அம்மாகிட்ட மட்டுமாவது உண்மையை கூறிவிட்டு வந்திருக்கலாமோ..? இப்ப ஃபோன் பண்ணி சொல்லிடலாமா..?' என்று மனம் எண்ணியதை உடனே அறிவு மறுத்தது..
'வேண்டாம்.. அம்மாகிட்ட சொன்னா உடனே விஷயம் அப்பாக்கு போய்டும்.. அப்புறம் அண்ணா ஸ்ட்டேஷன்க்கு வந்து என்னை இழுத்துட்டு போய்டும்.. என் ப்ளான் ட்டோட்டல் ஸ்பாயில் ஆய்டும்..
ஃப்ரெண்ட்ஸ் கூட ட்டூர் போறேன்னு சொல்லிட்டு வந்தது தான் கரெக்ட்..' என்று அவள் செய்கையை நியாயப்படுத்தியது..
சீட்டில் சாய்ந்து கால்களை நீட்டிக் கொண்டு கண்களை மூடி flashbackக்கில் பயணித்தாள்..
YOU ARE READING
காதல் கொள்ள வாராயோ...
General FictionCompleted.. Thanks for ur support.. friends..😊😊