எதிர்பாராத திருப்பம்

5.4K 159 55
                                    

புதிய ஊர், புதிய மனிதர்கள், புதிய வாழ்க்கை சூழல் மற்றும் புதிய திருப்பங்களை ஏற்படுத்த போகும் பயணத்தின் தொடக்க நாளான அந்த காலைப் பொழுது அழகாக புலர்ந்தது..

மதுவர்ஷினி பயணித்துக் கொண்டிருக்கும் பொதிகை எக்ஸ்பிரஸ் தென்காசியை நோக்கி விரைந்துக் கொண்டிருந்தது..

"Good morning.. " என்றான் அவன் upper birthலிருந்து இறங்கி

"Good morning.." என்றாள் மது போர்வையை மடித்தபடி

"Luggageலாம் ரெடியா எடுத்து வச்சுக்கோங்க ட்ரெயின் கொஞ்ச நேரம் தான் இந்த ஸ்ட்டேஷன்ல நிக்கும்.." என்றான்

"Ok.." என்றாள் மது

அவன் refresh செய்துக் கொள்ள சென்றான்..

மது சந்தியாவிற்கு call செய்து address கேட்டாள்..

"என்ன மது..? நீ ஏன் இப்டி தனியா வந்த..? நீ இங்க வர்றனு அஜய்கிட்ட சொல்லியிருந்தா கண்டிப்பா உன்ன போகவிட்டிருக்க மாட்டான்.. அப்போ தெரியாம வந்திருக்கியா..?" என்று வினவினாள் சந்தியா

"அதில்ல அண்ணி.. நான்.."

"நீ எதுவும் பேசாத உங்க வீட்ல கவலைப்படுவாங்கள்ல.. இப்டி பண்ணலாமா..? சரி நானே stationக்கு வந்து பிக் அப் பண்ணிக்கிறேன்.. ஆனா நாளைக்கே உன்ன சென்னைக்கு அனுப்பிடுவேன்.. வச்சிட்றேன் மது.."

சந்தியாவை நினைத்து மது புன்னகைத்தாள்
அவனும் வந்தான்..
"Address கேட்டியா..?"

"அண்ணியே stationக்கு வர்றாங்களாம்.. வீட்டுக்கு தெரியாம வந்திருக்கேன்னு கண்டுபிடிச்சுட்டாங்க..  நான் வந்ததே அவங்களுக்காக தான்னு தெரிஞ்சிருந்தும் 'ஏன் வீட்டுக்கு தெரியாம வந்த'னு கோபப்பட்டாங்க.. என்மேல எவ்ளோ அக்கறை பாத்தீங்களா.. wonderful person.. இவங்கள நான் எப்டி மிஸ் பண்ணுவேன்..?" என்று சந்தியாவை மெச்சினாள்

"ஹூம்.. எனக்கும் அந்த characterஅ மீட் பண்ணனும்னு ஆசையா இருக்கு.."
என்றான்

"என்ன பிக் அப் பண்ண வருவாங்கள்ல அப்போ introduce பண்ணி வைக்கிறேன்.." என்றாள் மது
" சரி.. இவ்ளோ பேசினோம் உன் பேர் சொல்லவே இல்ல.."

"ஹய்யோ சுத்தமா மறந்துட்டேன்.. என் பேர் மது.. மதுவர்ஷினி.. உங்க பேரு..?"

"கார்த்திக்.." என்றான்
பின் இருவரும் ஃபோன் நம்பர் பரிமாறிக் கொண்டனர்..

        Train stationஐ அடைந்தது..

"அதோ.. அண்ணி.." என்று மது சுட்டிக்காட்டிய திசையில் நோக்கிய கார்த்திக் அதிர்ந்தான்..

"நீ யார சொல்ற..?" என்றான்

"அதோ.. அந்த red chudi.." என்றுக் கூறிவிட்டு
தன் லக்கேஜ்ஜை ட்ரெயினில் இருந்து இறக்கி வைத்துக் கொண்டிருந்தாள்..

கார்த்திக் சந்தியாவிடம் சென்றான்..  கார்த்திக்கை கண்ட சந்தியா ஒருநொடி திகைத்தாள்..

"என்ன சந்தியா stationக்கு வந்திருக்க..?" என்று சந்தியாவிடம் கேட்டான் கார்த்திக்
"Friendஅ பிக் அப் பண்ண வந்தேன்.." என்றாள்

அவர்கள் அருகில் வந்தாள் மது..
"இவ தான் என் friend மது.. என் காலேஜ் மேட் ஜூனியர்..
மது.. இவங்க என்னோட அண்ணன்.." என்று  அறிமுகம் செய்து வைத்தாள் சந்தியா

இப்போது மாபெரும் அதிர்ச்சிக்குள்ளாகியது மது..
ஒரு வினாடி மதுவின் இதயத் துடிப்பு நின்றது.. அவளது கண்கள் பெரிதானது.. எச்சிலை விழுங்கினாள்..

"எ... என்ன்ன்ன..
அ...அண்ணன்னாஆ...???!!!!!"

???!!!!!"

Oups ! Cette image n'est pas conforme à nos directives de contenu. Afin de continuer la publication, veuillez la retirer ou mettre en ligne une autre image.
காதல் கொள்ள வாராயோ...Où les histoires vivent. Découvrez maintenant