Drashti as Madhuvarshini
Gurmeet as Stranger
"அவ்ளோ தான்.. flashback over.." என்றாள் மது"அப்பறம் என்னாச்சு..?" என்றான் ஆர்வமாக
"அண்ணனுக்கு வேலை கிடைச்சாச்சு.. சென்னை infotechல work பண்றான்.. management departmentல.. நல்ல salary.. அண்ணி வீட்ல மாப்பிள்ளை பார்க்குறதுக்குள்ள போய் பெண் கேக்கலாம்னு சொன்னா, 'அவ தான் அவங்க அப்பா சம்மதிக்க மாட்டாங்கனு சொல்றாளே.. தேவையில்லாம ஏன் problem create பண்ணனும் விட்று'னு அண்ணா சொல்றாங்க.. அண்ணி கிட்ட கேட்டா..'எங்க வீட்ல நான் இதபத்தி ஒரு வார்த்த கூட பேசமாட்டேன் அவங்கள face பண்ற தைரியம் எனக்கு இல்ல'ங்குறாங்க..
உண்மையான அன்ப மனசுல போட்டு பூட்டிக்கிட்டு அவங்கள அவங்களே ஏமாத்திக்கிறாங்க.. இப்டி விட்டுக்கொடுத்து வாழற மனபக்குவம் இருக்குற ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிகிட்டா எவ்ளோ நல்லா இருப்பாங்க.. அவங்க குடும்பமும் சந்தோஷமா இருக்கும்.. அதனால தான் இனிமேலும் வெய்ட் பண்ண கூடாதுனு tour போறேன்னு சொல்லிட்டு எங்க அண்ணியோட ஊருக்கு போறேன்.." என்றாள் மது.
அவள் கூறியதையெல்லாம் கேட்டுக் கொண்டே இருந்தவன்..
'பரவாயில்லையே நான் கூட தன் காதலுக்காக வீட்ட விட்டு ஓடி வந்த பொண்ணுன்னு தப்பா நெனச்சுட்டேன்..' என்று எண்ணினான்