புரியாத மனநிலை

5.8K 191 32
                                    

                  "என்ன மது அறுவடை எல்லாம் பாத்தியா...?" என்றாள் சந்தியா

"ஓ.... பாத்தேன்.. செம்மையா இருந்தது.. நல்ல chance.. இத மிஸ் பண்ணாம எல்லாத்தையும் snap எடுத்திருக்கேன் பாருங்க..." என்று தன்  மொபைலில் இருந்த புகைப்படங்களை காண்பித்தாள் மது..

"Wow.. எங்கப்பாவையும் அண்ணனையும் சூப்பர் still எடுத்திருக்க.. நான் போய் அம்மாகிட்ட காட்டிட்டு வரேன்.."

" அப்பறம் காட்டலாம் இப்போ எதாவது பேசலாம்.."

"சொல்லு மது.."

"நாளைக்கு உங்க ரிலேட்டிவ்ஸ் யாரெல்லாம் வராங்க..?"

"சித்தி, சித்தப்பா அவங்களோட ரெண்டு பொண்ணுங்க, அம்மா கூட பிறந்த மாமா, அத்தை அவங்களோட ரெண்டாவது பொண்ணு, ஒரு பையன், முதல் பொண்ணுக்கு கல்யாணம் முடிஞ்சு இப்போ தான் abroad போனாங்க அப்பறம்  அப்பாக்கூட பிறந்த அத்தை, மாமா அவங்க பொண்ணு, ஒரு பையன் மட்டும் வரான் மூத்த பையன் டெல்லில வேலை பாக்குறாங்க.. லீவ் இல்லை.." என்றாள் சந்தியா

"ஹாங்.. ok.. அப்பறம் உங்க அண்ணனுக்கு எப்போ கல்யாணம்..?"

"எனக்கு முடிச்சிட்டு தான் பண்வாங்க.."

"ஓ.. உங்க அத்த பொண்ணு studies முடிஞ்சிடுச்சுனா பண்ணிடலாம்ல..?"

"யார் சொன்னா அப்டி..?"

"அங்க வயல்ல ஒரு பாட்டி சொன்னாங்க.."
ஆனால் அப்படி யாரும் இருக்க கூடாது என்று ஏங்கியது மதுவின் மனது..

"அதுவா. அந்த காலத்துல பொதுவா  அப்டி தான செய்வாங்க.. அதனால சொல்லியிருப்பாங்க..  இதுவரைக்கும் அந்த மாதிரி பேச்சு வரல"

"ஓ.. "
'இனிமே வரலாம் வராமலும் போகலாம்' என்று நினைத்தாள் மது

"எதுக்கு கேட்குற..?"

"ஹூம்... அது.. ஹாங்.. உங்க அண்ணனுக்கு பொண்ணு ரெடியா இருந்து கல்யாணம் பண்ணி வச்சுட்டா உங்களுக்கு இன்னும் கொஞ்சம் டைம் கிடைக்கும்ல அதான்..." என்று எதையோ சொல்லி சமாளித்தாள்

"மது.. எல்லா நேரமும் என்னை பத்தி தான் யோசிப்பியா..?" கண்கள் பனிக்க கேட்டாள் சந்தியா.. மதுவின் கைகளை பிடித்துக் கொண்டாள்

காதல் கொள்ள வாராயோ...Where stories live. Discover now