ஒரு ஞாயிறன்று காலை மது தாமதமாக எழுந்து வந்தாள்..
அண்ணன்கிட்ட இன்னிக்கே கேட்டிடலாம் என்று அஜய்யை தேடினாள்..
"ம்மா.. அண்ணன் எங்கே..?"
"Foot ball practice பண்ண groundக்கு போயிருக்கான்.."
'ம்.. அண்ணன் வீட்டுக்கு வரவரைக்கும் suspence தாங்க முடியாதே..😞 லைப்ரரில ஏதாவது புக் எடுத்துட்டு வந்து படிக்கலாம்.. சூப்பர்.. போற வழியில அப்படியே அண்ணன பாத்து கேட்டுடலாம்..'
விரைவாக தயாராகி தன் அண்ணனை காணச் சென்றாள்..
அஜய் தன் நண்பர்களுடன் football விளையாடிக் கொண்டிருந்தான்.. மதுவை கண்டதும் அவளருகில் வந்து
"என்ன மது இந்த பக்கம்.. ஷெட்டில் விளையாட வந்தாயா"என்றான்
'ஆஹா.. அப்டிக்கூட ப்ரீத்திய கூட்டிட்டு வந்திருக்கலாமோ.. அந்த யோசனை வரலயே.. ப்ச் பரவாயில்ல..'
"இல்லண்ணா..அது வந்து.." என்று தயங்கினாள்
"என்ன விஷயம்..? அரியர்ஸ் வச்சிட்டியா என்ன..?"
"சீச்சி.. இல்ல.."
"வேற என்ன..?"
'ஐயையோ ஒரு வேகத்துல வந்துட்டோம் அண்ணன்கிட்ட போய் எப்டி இதபத்தி பேசறது..? என்னதான் friendlyயா பழகினாலும் இந்த விஷயத்த போய் எப்டி கேட்குறது..?' என்று குழம்பினாள்
"இல்ல லைப்ரரி போறேன் உனக்கு ஏதாவது புக் வேணுமா..?" என்று பேச்சை மாற்றினாள்
"என்ன திடீர்னு லைப்ரரி..?"
"போர் அடிக்குது அதான் சும்மா நாவல்ஸ்.."
"எல்லா படமும் பார்த்து முடிச்சாச்சா..?"
"ஓ.. மனப்பாடம்..."
"ம்...நம்ம வீட்ல சிஸ்ட்டம், டி.வி, கேம்ஸ்னு இவ்ளோ இருந்தும் நமக்கு போரடிக்குது பாவம் சந்தியா ஹாஸ்ட்டல்ல எவ்ளோ போர் அடிக்கும்.. அவளுக்கு எப்டிதான் பொழுது போகுதோ..?"
'ஆஹா.. அண்ணா மாட்டிக்கிட்டியா..!' என்று மனதிற்குள் சிரித்துக் கொண்டு,
"அதென்ன இப்போலாம் சந்தியா பத்தியே பேசுற..?"என்றாள்
"என்ன..?"
"ஒன்னுமில்ல.. ஓக்கே நான் போய்ட்டு வரேன்.. bye.."
தான் கேட்காமலே தன் கேள்விக்கு பதில் தானாக கிடைத்துவிட்டது என்று நமட்டு சிரிப்புடன் சென்றாள் தங்கை..மது தீவிர யோசனை செய்தாள்..
'இவங்க ரெண்டு பேரும் இப்படியே சொல்லாம இருந்தா அப்பறம் வயசாயிடும்.. என்ன பண்ணலாம்..? பேசாம நாமலே ஒருத்தர் எழுதுற மாதிரி ஒருத்தர்க்கு letter எழுதிடலாமா..? சீச்சி.. வேண்டாம் அது தப்பு.. ஒரு வேலை நான் கூடவே இருக்கிறதுனால அண்ணன் சந்தியாகிட்ட privateஆ பேச முடியலையோ..? ஹூம்.. அப்படியாகத்தான் இருக்கும்.. இனிமே பாருங்க இந்த மதுவோட gameஅ..'
YOU ARE READING
காதல் கொள்ள வாராயோ...
General FictionCompleted.. Thanks for ur support.. friends..😊😊