Bye for now

6.4K 172 56
                                    

               மாலையானது..
மது தன் தந்தையை காண மாடிக்கு சென்றாள்..
மகேந்திரன் மாடி ரூமில் ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருந்தார்..

மது chairரில் அமர்ந்து..
"அப்பா.. என்மேல கோபமாப்பா..??" என்றாள் தயக்கத்துடன்

"கோபம் இல்லமா..  நீ எவ்ளோ பெரிய வேலையெல்லாம் பண்ணியிருக்க.. ரொம்ப சந்தோஷமா இருக்கு.. ஆனா இனிமே எதுவானாலும் சொல்லிட்டு செய் சரியாமா.. " என்றார்

தான் செய்தது தவறு தான் என்று மதுவிற்கு நன்றாகத் தெரியும்..
ஒரு பெற்றோருக்கு தன் மகள் தங்களிடம் மறைத்து ஊர் விட்டு ஊர் போயிருக்கிறாள் என்று தெரியவந்தால் எவ்வளவு வருத்தமளிக்கும் என்று தெரியும் ஆனால் தன் தந்தை தன்னை கடிந்து கொள்ளாமல் இருந்தது அவளுக்கு சங்கடத்தை அளித்தது..

"ப்பா.. என்ன திட்டிடுங்கப்பா.. இல்லனா ரொம்ப guiltyயா இருக்கும்.." என்றாள்

"இல்லம்மா.. நீ எந்த தப்பும் பண்ணல.. அண்ணனுக்காக தான செஞ்ச..  பரவாயில்ல.. அப்பாக்கு கோபம் இல்ல.. ஆனா மறுபடியும் இந்த மாதிரி செய்யாத okவா..?"

"ம்.. தப்பு பண்ணிட்டேன் இல்லப்பா..! " என்றாள் சோகமாக

மகளின் சோக முகத்தை தாங்கமாட்டாமல்..
"மது.. நீ ஊர்ல இல்லாததால அப்பாக்கு ஓரே boreமா.. badminton விளையாடியே ரொம்ப நாளாச்சு.. நாளைக்கே ஒரு மேட்ச் வச்சுடலாம்.. " என்றார்

"ப்பா..  பேச்ச மாத்தாதிங்க.. சொல்லுங்க தப்பு பண்ணிட்டேன்ல.. " என்றாள் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு

"மது.. நான் குடுத்த ஃப்ரீடம் நீ மிஸ்யூஸ் பண்ணலம்மா.. நீ தப்பு பண்ணல.. நீ guiltyயா feel  பண்ண அவசியமே இல்ல.. உன்னோட நோக்கம் தப்பு இல்லம்மா.. வேற வழியில்லனு தான செஞ்ச.. பரவாயில்லமா.. நார்மலா இரு மது.."

"இல்லப்பா..  நான் பண்ணது தப்பு தான்.."

"என்ன இப்ப உன்ன திட்டனும் அவ்ளோ தான.. ? நான் ரெடி.. இரு உங்க அம்மாவையும் கூப்பிட்றேன்.. " என்றார் வேண்டுமென்றே

"ஐய்யோ.. அப்பா வேணாம்.." என்று அவசரமாக கூறிவிட்டு சிரித்தாள்..

காதல் கொள்ள வாராயோ...Where stories live. Discover now