அழகாய் புலர்ந்தது அந்த காலைப் பொழுது..
சந்தியா மனம் முழுவதும் மகிழ்ச்சியால் நிறைந்திருந்தது..
தன் மன வேதனையை ஒதுக்கி வைத்துவிட்டு சந்தியாவின் உற்சாகத்தோடு இணைந்துக் கொண்டாள் மது..அஜய் அவனது பெற்றோர், சித்தி, சித்தப்பா, அவர்களது பிள்ளைகள் இருவர் என ஏழு பேருக்கு தென்காசியில் ரூம் புக் செய்தான் கார்த்திக்..
மது அவர்களை காணப்போவதென்றால் அவனுடன் தான் செல்ல வேண்டும் என்ற காரணத்தால் வீட்டிலேயே தங்கிவிட்டாள்..பெண்கள் அனைவரும் தயாராகிக் கொண்டிருந்தனர்..
ஒருவரது அழகை மற்றவர் புகழ்ந்துக் கொண்டிருந்தனர்..
"மது.. பெரியம்மா உன்ன கூப்பிடறாங்க.. கீழ ரூம்ல இருக்காங்க.." என்று அங்கு வந்து கூறினாள் சுஹா
மது அன்னப்பூரணியை காணச் சென்றாள்..
"ஆன்ட்டி.. உள்ள வரலாமா.. ?" என்றாள் வெளியே நின்றபடி
"வா.. மது.. " என்று கார்த்திக் குரல் கேட்டது.. உள்ளே சென்றாள்
ரூமில் கார்த்திக் மட்டும் இருந்தான்.."அம்மா கிச்சன்ல பிஸியா இருக்காங்க.. உங்க அப்பாகிட்ட பேசினியா.. எப்போ வராங்க.. ?"
"நான் ஆன்ட்டிகிட்ட சொல்லிக்கிறேன்.." என்றாள் வேறு பக்கம் பார்த்தபடி
"உங்க ஆன்ட்டி தான் என்ன கேக்க சொன்னாங்க.."
"11 மணிக்கு இங்க இருப்போம்னு சொன்னாங்க.."
"மது.. இந்த நெக்லஸ் தோடு செட் அப்றம் வளையல்.. இதெல்லாம் அம்மா உன்ன போட்டுக்க சொன்னாங்க.." என்று ஒரு ஜுவல் பாக்ஸை அவளிடம் கொடுத்தான்..
"வேண்டாம்.." என்று வெளியே செல்ல திரும்பினாள்
"மதூ.. " என்றான் காதல் உருகும் குரலில்
அந்த குரல் அவளை நிற்க செய்தது..
"மதூ.. அம்மாக்காக போட்டுக்கோ.. அவங்க தான் ஆசப்பட்டாங்க.. எங்களுக்காக நீ இங்க வந்திருக்கியாம்.. உன்ன நாங்க நல்லா பாத்துக்கனுமாம்.."
"சரி.. குடுங்க.. " என்று அதை வாங்கிக் கொண்டு மீண்டும் வெளியே செல்ல திரும்பினாள்