நிழல் 15

2.9K 136 21
                                    

சட்டென தன் கைப்பேசியை தேடின மஹி, வேகமாக எடுத்து திறையை பார்த்தான் , மணி 6.

கயலின் நினைவு கண் முன் வர , கயலின் எண்ணிற்கு அழைத்தான்.

"ஹோலோ" , என்ற மஹியிடம் எப்போது வருவீர்கள் என்ற கயலின் வார்த்தை பதில் இல்லா கேள்வியானது.

நடந்ததை கூறி கயலை சாமாதானப்படுத்தினான் மஹி.

பூங்காவைவிட்டு வெளியே வந்த கயல் , சிந்துவும் ஆர்யாவும் பூங்காவிற்குள் நுழைவதைக் கண்டாள். சற்று செடிகளின் ஓரமாக தன் உடலை மறைத்துக்கொண்டு தலையை வெளியே நீட்டி அவர்கள் சென்றதும் பூங்காவை விட்டு வெளியேறினாள்.

செடிகளின் நடுவே ஒரு அழகிய பென்ஜ் , சிந்துவும் ஆர்யாவும் மகிழ்ச்சியாக அமர்ந்தனர்.

"கயல் ஏன் உன்னை தப்பா பார்க்கிறாள், நம்ம ப்ரண்ஸா இருக்கப்ப அவ இப்படி பேசல, அவளுக்கு நம்ம லவ் பிடிக்கல அதான் இப்படி பேசறா " என்ற சிந்துவை தடுத்தான் ஆர்யா.

கயல் எப்போதும் நமக்கு தீங்கு நினைக்க மாட்டாள், யாரோ அவளை குழப்பிவிட்டுருக்கிரார்கள் என ஆர்யா கூறினான்.

தன்னை பற்றி தவராக பேசிய கயலையும் விட்டுகொடுக்காமல் பேசும் ஆர்யாவின் பண்பு சிந்துவை மேலும் கவர்ந்தது.

"நாம கண்டுபிடிப்போம் ஆர்யா, நமக்குள்ள பிரச்சனை வரனும்னு யாரோ நினைக்கிறார்கள் அது யார் என நாம் தெரிந்துக்கொண்டு , நம்மை நிரூபிப்போம் " என்றாள் சிந்து.

சிந்துவின் முகத்தை பார்க்காமல் தரையை பார்த்தே சிரித்துக்கொண்டிருந்தான் ஆர்யா.

பின் இருவரும் புறப்பட்டனர்.

சூரியன் சுட்டெரிக்க, மரத்தின் நிழலை தேடி பறவைகள் ஒதுங்க , தன் அறையின் ஜென்னல் வழியே அனைத்தையும் ரசித்துக்கொண்டிருந்தாள் கயல்.

"காக்க வைத்துவிட்டு ஒரு சிம்பில் சாரி சொன்னா போதுமா ?? வரட்டும் மஹி அப்புறம் இருக்கு " என புலம்பிக்கொண்டே தன் கட்டுலில் அமர்ந்திருந்தாள்.

தன் சீப்பு கண்ணாடியை எடுத்துக்கொண்டு தன்னை வேகமாக அலங்கரித்துக்கொண்டிருந்தாள் ரம்யா.

தன் உறவினர் வீட்டிற்கு செல்வதாகவும், திரும்பி வர மதியம் ஆகும் என்று கயலிடம் கூறிவிட்டு கிளம்பினாள்.

பரபரப்பான சாலை, வேகமாக வேலைக்கு செல்லும் பெரியோர்கள், வேறு வழியில்லாமல் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், காலை வேளை சாலையின் அழகை கூற வார்தைகள் போதாது.

இவ்வாறான சாலையில் ஒருவித பதற்றத்துடன் மாநகர பேருந்தில் ஏறினாள் ரம்யா.

சென்ட்ரல் 1 என டிக்கெட் எடுத்தாள்.

தன் கைப்பேசிக்கிக்கு வந்த அழைப்பை பாத்தாள், பதிவு செய்யப்படாத எண், ஆனால் நன்றாக மனதில் பதிந்த எண் , எனவே தயக்கம் இல்லாமல் எடுத்து பேசினால் .

" ஹோலோ ரம்யா , நான் தான், எங்க இருக்க நான் இன்னும் ஒரு மணி நேரத்தில் சென்ட்ரல் வந்துடுவேன் " என்ற குரலுக்கு மறுமொழி கூறினாள் ரம்யா.

" இன்னும் 45 நிமிடத்தில் வந்திடுவேன் , ரயில்வே ஸ்டேசன் எதிரே இருக்க காப்பி ஷாப்ல வைட் பண்ரேன் வந்திருங்க " என்றாள்.

தாம் செய்வது சரியா? என ஆயிரமாயிரம் முறை தன் மனதில் கேள்வி என்ற அம்பினை பாய்ச்சினால் ரம்யா.

பதில் ஏதும் கூற அவள் மூளைக்கு தோன்றவில்லை, அதனை கேட்கவும் அவளுக்கு மனமில்லை.

நிழல்(completed)Where stories live. Discover now