நிழல் 16

2.9K 133 38
                                    

அம்பு பாய்ந்திருந்தால் கூட ரம்யாவின் மனதில் இவ்வளவு காயம் ஏற்பட்டிருக்காது, தாம் செய்த காரியத்தை எண்ணி மனதிற்குள்ளே புழுங்கினாள்.

"லாஸ்ட் ஸ்டாப்பிங் சென்ட்ரல் ...." என்ற பேருந்து நடத்துனரின் குரல் காதோரம் கேட்க எழுந்து கீழே இறங்கினாள்.

தன் கைப்பேசியை எடுத்து பார்த்தவள் , அந்த எண்ணிற்கு மீண்டும் அழைக்க மனம் வராமல் சாலை ஒரமாக நின்றாள்.

கைப்பேசி சினுங்க , மறுமுனையில் அதே எண், "ஹோலோ நான் வந்துட்டேன் , நீ எங்க இருக்க " என்ற குரலைக்கேட்ட ரம்யா , 5 நிமிடம் வந்துட்டேன் என கூறி அழைப்பை துண்டித்தாள்.

அடுத்த 10 நிமிடத்தில் காப்பி ஷாப்பை அடைந்தாள்.

"ஏன் என்னை வர சொன்ன ?, நீ என்கிட்ட சொன்ன வேலையை முடிச்சிட்டேன் , தயவு செய்து இனிமே என்னை தொந்தரவு செய்யாத ப்ளீஸ்.." என்று ரம்யா பணிவான குரலில் கேட்டாள்.

"இன்னும் ஒன்னு மட்டும் செய்யனும்... அதை பற்றி பேச தான் இப்போது வர சொன்னேன் " என்றார் ரம்யாவின் எதிரில் இருந்தவர்.

தன்னால் இதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது என கண்டிப்பான குரலில் ரம்யா கூற ,

"என்ன ரம்யா எதிர்த்து பேசர, நான் என்ன செய்வேன்னு தெரியாத உனக்கு" ?? என்றார் மிரட்டலாக.

அமைதியான ரம்யா , " சொல்லு என்ன செய்யனும் .." என்றாள்.

இப்போதைக்கு அமைதியாக இரு என்றும் , முக்கியமாக உன் போனை பத்திரமாக வைத்துக்கொள் , கால் லாக்ஸ் அடிக்கடி கிளியர் (call logs) பண்ணு என்றார் அந்த மனிதர்.

நீயும் நானும் பேசிக்கொள்வது , நமக்குள் இருக்கும் ரகசியம் எதுவும் யாருக்கும் தெரியக்கூடாது என எச்சரித்து கிளம்பிவிட்டான்.

ஆர்டர் செய்த காபியை வேண்டா வெருப்பாக பருகிவிட்டு தானும் கிளம்பினாள்.

______________________

தன் விடுதி அறையை முன் வந்தடைந்து கதவை டப் டப் டப்... என வேகமாக தட்டினாள் ரம்யா.

கதவைத் திறந்த கயல்," என்னடி சீக்கிரம் வந்துட்ட ? " என வினாவினாள் .

"சித்திக்கு ஏதோ முக்கியமான விசயமாம், வெளியே கிளம்பினாங்க அதான் நானும் வந்துட்டேன் " என்று பதில் கூறினாள்.

இவளின் வார்த்தையில் ஏதோ குழப்பம் தெரிகிறது, எதையோ மறைக்கின்றாள் என யூகித்தாள் கயல்.

தன் கைப்பேசியை கட்டிலின் மேல் வைத்துவிட்டு , அசதியில் நித்திராதேவியின் மடிசாய்ந்தாள் ரம்யா.

வழக்கம்போல நாவல் படித்துக்கொண்டிருந்த கயலின் கவனத்தை ரம்யாவின் கைப்பேசியில் இருந்து வந்த சப்தம் திரும்பி பார்க்க வைத்தது, மீண்டும் மீண்டும் அழைப்பு வரவே கயல் ரம்யாவின் போனை எடுத்து பார்த்தால் , பதிவு செய்யப்படாத எண் , ஒரே எண்ணின் அழைப்பு அடிக்கடி வரவே கயல் பேசினாள்.

" ஹாலோ , ரம்யா தூங்குர, நான் அவ ப்ரண்ட் , உங்க பெயர்???" என்று கயல் கூறி முடித்தவுடன் அழைப்பு துண்டிக்கப்பட்டது.

ஹாலோ,ஹாலோ .... என கயல் கூறிவிட்டு மறுமொழி ஏதும் இல்லாதால் போனை வைத்துவிட்டு கிளம்பினாள்.

மாலை மணி 5 ஆகியும் ரம்யா எழவில்லை, மதிய உணவே சாப்பிடாத தோழிக்காக விடுதி சமையலரையில் இருந்து காபி கொண்டு வந்து எழுப்பினாள் கயல்.

சோம்பலை முறித்து கொண்டு தன் கைப்பேசியை தேடி எடுத்த ரம்யா, பதற்றமடைந்தாள்.

"என் போன் யாரு அட்டன் பண்ணது ?" என கேட்ட ரம்யாவிடம் தான் எடுத்து பேசியதையும் , பதில் கூறாமல் அழைப்பு துண்டிக்கப்பட்டதையும் கூறினாள் கயல்.

ரம்யாவின் முகத்தை பார்க்கணுமே....

தொடரும்.....

நிழல்(completed)Where stories live. Discover now