இரவு உணவு முடித்துவிட்டு கயலும் ரம்யாவும் அறைக்கு சென்றனர்.
மணி 10 , எல்லாரும் லைட்ஸ் ஆப் பண்ணிட்டு படுங்க என வார்டன் குரலெழுப்ப டப் டப் டப்...... என வரிசையாக அனைத்து அறைகளில் இருந்தும் சப்தம் வந்தது.
கயலும் ரம்யாவும் மெல்லிய குரலில் பேச துவங்கினர்.
"ரம்யா , நீ என்கிட்ட எதாவது மறைகின்றாயா?" என கயல் கேட்க மௌனமாக இருந்தாள் ரம்யா.பின்பு,"நேரடியாக கேலு கயல், இப்போது பல சமயம் நீ பேசுவதே புரியவில்லை" என சமாளித்தாள் ரம்யா.
"ஆர்யாவ நீ லவ் பண்றயா?" என்ற கயலின் கேள்வி ரம்யா ஒருவாரு எதிர்பார்த்தது தான் , எனவே அவள் தயங்காமல் பேச துவங்கினாள்.
ஆர்யா தன்னிடம் காதலிப்பது போல் பேசி பழகிவிட்டு கடைசியில் காதல் எல்லாம் இல்லை நட்பை நீ தவறாக புரிந்து கொண்டாய் என்று கூறினான் என ரம்யா சொல்லி முடிக்க கயலினாள் தன் கோபத்தை அடக்க முடியவில்லை, ஏன் இதனை தன்னிடம் மறைத்தாய் என கயல் கேட்டுவிட்டு சற்று அமைதியானாள் பின் மீண்டும் சிந்து ஆர்யாவை காதலிப்பது உனக்கு தெரிந்தும் ஏன் இதனை எங்களிடம் கூறவில்லை என கண்டிப்பான குரலில் கேட்க ரம்யா பல காரணங்கள் கூறி மழுப்பினாள்.
நாளை ஞாயிறு, மஹிக்கு ஏதேனும் வேலை இருக்கிறதா என கேட்டுவிட்டு , இல்லை என்றால் வெளியே எங்கேனும் அழைத்து ரம்யா கூறியதை தெரியப்படுத்த வேண்டும் என தீவிர மனக் கணக்கு போட்டாள் கயல்.
ஒரு பாதி கதவு நீயடி......கைப்பேசி ஒலிக்க மறுமுனையில் மஹி.
"கயல், நாளைக்கு நீ பிசியா ?? , உன்கிட்ட கொஞ்சம் பேசனும் " எங்கேயாது மீட் பண்ணலாமா ?" என்ற மஹியின் வார்த்தைகள் கயலின் சிரமத்தை குறைத்தது.
"போகலாம், எங்கே, எப்போது ?" என்றாள் கயல்.
"3'clk , நம்ம காலேஜ் பக்கத்தில் இருக்கின்ற திருவான்மயூர் பீச் " என்றான் மஹி.
தன் மெல்லிய குரலில் சரி என பதிலளித்து வெட்கத்துடன் படுத்தாள் கயல்.
கடற்கரை காற்று கண்ணில் வீச
காதலனுடன் கதைகள் பல பேச
காலை வரைக் காக்க வேண்டுமே என்று
கயலின் மனது
கவி பாடியது.நீ ஒன்னும் சரி இல்லை , வீட்டுக்கு போய்யிட்டு அப்பா பேசுவதை எல்லாம் கேட்டா தான் நீ அடங்குவ என தன் மனதை தானே திட்டினாள் கயல்.
காலை 6 மணிக்கே எழுந்து , மாலை தான் உடுத்தும் உடைகளை அயன் செய்தாள். தன் முகத்தை தானே கண்ணாடியில் முதன்முதலாக அழகு பார்த்தாள்.
குட்டிப்போட்ட பூனைப்போல அறைக்குள்ளே அங்கும் இங்கும் நடந்தாள்.
தொலைபேசியில் மஹியின் அழைப்பு வர வேகமாக சென்றாள்.
" ஹாலோ கயல், நீ எப்படி வர பஸ்ஸா ? ஆட்டோவா ? " என வினாவினான் மஹி.
"பஸ் தான் , இந்த ரூட்ல ஆட்டோ அவ்வளவா இல்லை " என்ற கயலின் பதிலை கேட்ட மஹி , "அப்போ கொஞ்சம் சீக்கிரம் கிளம்பு பஸ் வர வரைக்கும் வையிட் பண்ணனும்ல" என்றான்.
சரி என கூறிவிட்டு கடிகாரத்தை பார்த்தாள் , மணி 1 ஆகியது , 2 மணிக்கு பேருந்து நிலையத்தை அடைய வேண்டும் என வேகமாக கிளம்பினாள் கயல்.
ESTÁS LEYENDO
நிழல்(completed)
Ficción Generalகயல் கிராமத்துப் பெண், கல்லூரி படிப்பிற்காக சென்னை வருகிறாள், கல்லூரியில் சிந்துவின் நட்பு கிடைக்கிறது, மஹி , சென்னை பையன், நல்லவன் என தன்னை காட்டிக்கொள்ள விரும்பாதவன், தன்னடக்கம் அதிகம், பாசக்கார பையன், கயலும் மஹியும் காதலிக்க துவங்கினர்... இவர்கள்...