நிழல் 4

4.5K 165 26
                                    

செங்கதிர் தன் அறையை தழுவ , கண்களை கசக்கியவாரே தன் போர்வையை தகர்த்தி கட்டிலில் இருந்து எழுந்தான் மஹி.

" மஹி... மஹி.... மஹி கண்ணா .... " என அழைத்தாள் திலகா.

"வரேன் அம்மா " என குரல் கொடுத்தவாரே நடக்க துவங்கினான். கதவை திறந்து ,"குட் மார்னிங் அம்மா" என்றான்.

"குட் மார்னிங் டா.. இன்னைக்கு வாக்கிங் போகலயா ? லேட்டா எழுந்திருச்சிருக்க " என்றாள் திலகா.

" தூங்கிட்டேன் , அப்பா வாக்கிங் கிளம்பிட்டாறா ? " என்று கேட்டவாரே வெளியே எட்டி பார்த்தான் மஹி.

"உம்... கிளம்பிட்டாரு... நீ சீக்கிரம் ரெடி ஆகிட்டு கீழே வா சாப்பிட.." என பேசிக்கொண்டே மஹியின் அறையை விட்டு வெளியேறினாள் திலகா.

அடுத்த அரை மணி நேரத்தில் தன் வேலைகளை முடித்துவிட்டு கீழே சென்றான்.

டைனிங் டேபுலில் இருந்த சிந்து "வாங்க அண்ணா.. சீக்கிரம் சாப்பிடுங்க காலேஜ் போக லேட் ஆயிரும்" என்றாள்.

வேகமாக இருவரும் நான்கு பூரியை விழுங்கி விட்டு கிளம்பினர்.

சிந்து தன் வகுப்பறையை அடைவதற்குள் அங்கே வகுப்பு துவங்கி இருந்தது. ஆசிரியர் அனுமதி பெற்ற பின் வேகமாக சென்று கயலின் அருகில் அமர்ந்தாள்.

வழக்கமான முகப்பொழிவு இல்லாமல் .. உதடோரம் மெல்லிய சிரிப்பை வரவைத்து கொண்டு சிந்துவை பார்த்து தலை அசைத்தாள் கயல்.

சிந்துவின் மனதில் பெரும் குழப்பம் , வகுப்பு முடிந்த பின் கயலிடம் என்ன பிரச்சனை என்று கேட்கலாம் என தனக்கு தானே பேசிக்கொண்டாள்.

மணி ஓசை கேட்டதும் , ஆசிரியர் வெளியேரினார்.

சிந்து சட்டேன திரும்பி , "என்ன கயல் , டல்லா இருக்க " என்றாள்.

"சிந்து , அப்பா நியாபகமா இருக்கு ..... வீட்டுக்கு போகனும் போல இருக்கு" என்றாள் கயல்.

" இப்போ லீவ் இல்லையே... சரி நீ காலேஜ் முடிந்ததும் எங்க வீட்டுக்கு வா... ஒரு 8 மணிக்கு நானே உன்ன ஆஸ்டல்ல விட்டுடரேன்" என்றாள் சிந்து.

" வேண்டாம் டி .... பரவாயில்லை ... இன்னைக்கு வேண்டாம் " என்று கூறிய கயலை, ஒரு பெரிய பேச்சி வார்த்தைக்கு பின் சம்மதிக்க வைத்தாள் சிந்து.

சூரியன் தன் கதிர்களை மெல்ல சுருக்க , கல்லூரியும் முடிந்தது. வழக்கமான இடத்தில் மஹி சிந்துக்காக காத்திருந்தான்.

கயலும் சிந்துவும் ஒரு சேர வந்துகொண்டிருப்பதை அவனால் நம்ப முடியவில்லை .

உற்றுப் பார்த்தான்... பரவசமானான்...வண்டிக் கண்ணாடியில் தலையை கையால் கோதி, தன் முகத்தைத் துடைத்தான்.

சிந்து அவன் முன் வந்தடைந்தாள். "அண்ணா , இவ கயல் ... என் ப்ரண்ட்" என்றாள் சிந்து.

பின் கயலை நோக்கி "கயல் இவன் என் அண்ணண் ... மஹி , பி.காம் பஸ்ட் இயர் நம்ம காலேஜ் தான் என்றாள்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தும் பார்க்காத வண்ணம் தங்களின் வணக்கத்தினை கூறினர்.

பின் மூவரும் வண்டியில் ஏறி மஹியின் வீட்டை அடைந்தனர்.

நிழல்(completed)Donde viven las historias. Descúbrelo ahora