கயல் தன்னை நண்பனாக ஏற்றதாக கூறிய பின் ,மலர்ந்த முகத்துடன் வண்டியை வேகமாக தன் வீட்டிற்கு செல்லும் திசையில் திருப்பினான் மஹி.
கயல் கூறிய வார்த்தை அவனிடம் பெரிய இன்பத்தை உண்டாக்கியது , வீட்டிற்கு வந்தவுடன் தன் அறைக்கு சென்றான். இந்த தினம் அவனின் டைரியில் குறிக்க வேண்டிய முக்கியமான தினம் என எண்ணியவன், தன் அலமாரியை திறந்து டைரியை வெளியே எடுத்தான்.
" காதல் என்ற மாய வலையில் காலம் என்ற தூண்டிலினால் மாட்டிக்கொண்டேன் "
என தன் முதல் வரியை எழுத துவங்கினான் மஹி.மடமடவென 10 பக்கங்கள் தன் மனதில் தோன்றிய அத்தனை எண்ணங்களையும் பதித்தான். பின் அந்த டைரியை புதையல் போல் பத்திரப்படுத்தி வைத்தான்.
வெண்நிலவு வெட்கப்பட்டு கொண்டு மேகங்கள் பின்புரம் மறைய ,
மலைகளின் மறைவில் இருந்து வெளியே தன் கதிர்களை வீசினான் சூரியன்.கல்லூரியின் மணி சப்தம் கேட்டவுடன் அனைத்து மாணவர்களும் வகுப்பறைக்குள் சென்றனர். அக்கவுன்ட்ஸ் ஆசிரியர் பாடத்தை துவங்கினார். " பேசாமல் டிபார்ட்மண்ட் மாறிடலாமா செல்வா ?" என தன் நண்பனை பார்த்து கேட்டான் மஹி.
" ஓகே மச்சி, இங்கிலீஸ் டிபார்ட்மண்ட் போய்டலாம், பெண்ணுங்கலாம் சூப்பரா இருக்காங்கலாம் , பசங்க பேசிகிட்டானுங்க " என்ற செல்வத்தின் தொடையில் நறுக்கென ஓரு கில்லு கில்லினான் மஹி.
"டேய், நான் ஒரு பொண்ண பாத்து இம்பிரஸ் ஆகிட்டேன்" என வெக்கத்துடன் கூறினான் மஹி.
" இதல்லாம் நமக்கு பஸ்ட் டைம்மா மச்சி ... டெய்லி ஒரு பத்து பொண்ணுகளயாச்சும் பாத்து இம்பிரஸ் ஆகுரோம் , என்ன யூஸ் அவங்க பாக்கணுமே " என்றான் செல்வா.
மஹிக்கு கோபம் தலைக்கு ஏற , "டேய் , அது நீ பண்ற வேளை , என்னையும் ஏன்டா சேர்த்து சொல்லுற, என முறைத்தான்.
"சரி ,சரி யாருடா அந்த பொண்ணு?" செல்வா கேட்டு முடிப்பதற்குள் "கயல் தான்டா " என மின்னல் வேகத்தில் பதிலலித்தான் மஹி.
VOCÊ ESTÁ LENDO
நிழல்(completed)
Ficção Geralகயல் கிராமத்துப் பெண், கல்லூரி படிப்பிற்காக சென்னை வருகிறாள், கல்லூரியில் சிந்துவின் நட்பு கிடைக்கிறது, மஹி , சென்னை பையன், நல்லவன் என தன்னை காட்டிக்கொள்ள விரும்பாதவன், தன்னடக்கம் அதிகம், பாசக்கார பையன், கயலும் மஹியும் காதலிக்க துவங்கினர்... இவர்கள்...