நிழல் 24

2.8K 154 39
                                    

கதிரவன் தன் முகத்தை பூமிக்கு காட்டிய தருணம், மஹிக்கு உற்சாகத்தை தூண்டியது, எப்பொழுது விடியம் என காத்திருந்தவன், 6 மணிக்கே குளியலை முடித்துவிட்டு தன் அறையில் இருந்து கீழே வந்தான்.

என்ன இவன், லீவ்ல இவ்வளவு சீக்கிரம் குளிச்சிட்டு கீழ வரான், இவன பார்த்தால் அப்பா நம்மல தூங்கு மூஞ்சி அண்ணனை பார்த்து திருந்துனு அட்வைஸ் பண்ண ஆரமிச்சிடுவாரே....என மனதிற்குள்ளே புலம்பிக்கோண்டு வேகமாக குளியலரை புகுந்தாள் சிந்து.

தன் அறையில் இருந்து வந்த பஹி சோபாவில் அமர்ந்து பேப்பர் படிக்க துவங்கினான்.

சமயல் அறையில் இருந்து வந்த திலகா,
"டேய் மஹி... என்னடா காத்து காலையிலேயே இந்த பக்கம் அடிச்சிருக்கு" என்றாள்.

"அம்மா...என்ன கிண்டலா?? என ஓரப்பார்வையில் கேட்ட மஹிக்கு புன்னகையால் பதில் அளித்து விட்டு மீண்டும் சமையலரைக்குள் நுழைந்தாள் திலகா.

"டேய் தம்பி, சித்தி நேத்து வாக்கிங் கூட்டிட்டு போடானு ஒரு வார்த்தை தான் சொன்னேன், அதுக்காக இவ்வளவு சீக்கிரம் ரெடியாகி வந்துட்டயா.... யு ஆர் மை லவ்வபல் சன்... 2 மினிட்ஸ்.... வந்துருவேன்...." என படபடவேன பேசிக்கொண்டே தன் அறைக்குள் சென்றுவிட்டாள் அகிலா.

மறு வார்த்தை பேச கூட விடாமல் படபட வென பேசிவிட்டு வாக்கிங் பேக ரெடியாக சென்றிருக்கும் சித்தியின் மேல் மஹிக்கு செம கோபம்.

காலையில ஒருத்தன் குளிச்சிட்டு சோபால இருந்தா, என்னடா ஏன் சீக்கிரம் எழுந்தனு கேக்காம இப்படி குடும்பமே நல்லா வச்சி செய்ராங்க என்னை..... என மனதிற்குள்ளே முனுமுனுத்தான் மஹி.

ஆசைகள் பல,
வார்த்தைகள் சில,
சம்மதம் பெற,
ஆவளோடு நான் இங்கே,
ஆரவாரம் இல்லாமல் அமைதியாய் அவள் அங்கே,

என கவிதை எழுத ஆரமித்தவனை என்னடா மஹி, சீக்கிரம் கீழ வந்துருக்க எதாவது பேசனுமா? என மஹியின் அப்பா குரல் கொடுக்க,

ஆமாம் பா..., உங்க கிட்ட தான் பேசனும் என்றான் மஹி.

ம்ம்... சொல்லுப்பா... என்ன விசயம் என கேட்ட மஹியின் தந்தையிடம், அப்பா தோட்டத்தில் போயிட்டு பேசலாம் என்றான் மஹி.

நிழல்(completed)Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ