நிழல் 19

2.9K 138 40
                                    

சற்று நேரத்தில் வந்த அந்த நபர் ரம்யாவின் எதிரே அமர கயலால் அவரை சரியே பார்க்க இயலவில்லை.

மறைவில் இருந்து எட்டிப்பார்த்த கயல், சரியாக முகம்தெரியாததால் வேதனை அடைந்தாள்.

அவளுக்கென தனியாக டேபுள் இடைத்தப்பின் முகத்தில் இருந்து துட்பட்டாவை விலக்காமல் அப்படியே அமர்ந்தாள்.

ரம்யாவின் முகம் நன்றாக தெரிந்து, அவளின் முன் இருப்பவர் முகத்தை பார்க்க முயர்சித்த சமயம், " மேம், யுவர் ஆட்ரட் ப்ளீஸ் " என்று சர்வீஸ் மேன் குரல் கொடுக்க ,

"1 ஆனியன் தோசை" என ஆட்ரட் செய்தாள் கயல்.

கையலம்பும் சாக்கில் சென்று அந்த நபரின் முகத்தை பார்க்களாம் என முடிவெடுத்தாள்.

ரம்யாவின் டேபுளை கயலின் கால்கள் தாண்ட முயன்றன, அந்த முயற்சியில் படுதோல்வி அடைந்தாள்.

தன் பார்வையில் ஏதேனும் கோளாறா என சந்தேகப்பட்டு உற்றுப் பார்த்தாள்.

எதிரே இருந்தது மஹி...

கயல் தான் சுவாசித்த காற்றை அவளின் உடலில் இருந்து வெளியேற்ற முடியாமல் தவித்தாள், மூச்சு நின்றுவிட்டிருந்தால் கூட இவ்வளவு துன்பத்தை அடைந்திருக்க மாட்டோம் என மனம் நொந்து, தன் டேபுளுக்கு திரும்பினாள்.

ஆத்திரம் தொண்டையை அடைக்க , அருகில் இருந்த தண்ணீரை மட மட மட வென குடித்து காலி செய்தாள்.

அவர்கள் பேசுவதை கேட்க முயன்றாள். ஆனால் முடியவில்லை, இப்போது இங்கிருந்து கிளம்புவது தான் சிறந்தது என உணர்ந்தவள் அங்கிருந்து வெளியேறினாள்.

விடுதிக்கு வந்தடைந்தவள், மனம் கேட்காமல் மஹிக்கு போன் செய்தாள்.

"மஹி, எங்க இருக்க, உன்னை பார்க்க வேண்டும் " என்றாள்.

"கயல், நான் கொஞ்சம் வேளையா இருக்கேன் , ஈவ்னிங் பார்கலாமா , எப்போதும் போல பீச்ல ?" என்று கேட்டான் மஹி.

தன் அனைத்து கோபத்தையும் உள்ளே அடக்கிக்கொண்டு சரி என பதிலளித்து அழைப்பை துண்டித்தாள்.

ரம்யாக்கும் மஹிக்கும் என்ன சம்பந்தம், ஏன் தன்னிடம் பொய் கூறிவிட்டு ரம்யா சென்றாள்.

ஏன் மஹியும் தன்னிடம் மறைக்கிறான் என பல கேள்விகள் அவள் மனதினை பிளர்க்க , இப்போது அமைதியாக தூங்குவதே சிறந்தது , விழித்திருந்தால் தன் மனக்கேள்விக்கு எல்லாம் மூளை பதில் தேடும், தேவையேயில்லை என வராத தூக்கத்தை கஷ்டப்பட்டு வர வைத்து தூங்கினாள்.

மாலைக் காற்று முகத்தில் வீச, எழுந்து நேரம் பார்த்தாள்.

மணி 5,

மஹியிடம் இருந்து அழைப்பு வர வேகமாக கிளம்பினாள்.

ஆசையுடன் எப்போதும் அவள் பார்க்கும் கடல் இப்போது அவளிடம் அமைதியை உண்டாக்கவில்லை.

முதல்முறையாக தோற்றுப்போக அசைப்பட்டாள். தன் மனதில் இருக்கும் அனைத்தும் பொய்யாக வேண்டும் மஹி தன்னிடம் அனைத்தையும் தாமே கூறிவிட வேண்டும் என நிமிடத்திற்கு நிமிடம் வேண்டினாள்.

ஒருவழியாக பீச் வந்துசேர்ந்தான் மஹி.

மஹி கயலின் அருகே வரவர அவளுக்கு அனலாய் கோபம் பறந்தது.

அவன் அவள் முன்னே வந்து நிற்க தன் கோபம் அவனை எறித்துவிடுமோ என பயந்து , ஐந்தடி முன்னேறி நடந்து அமைதியாக நின்றாள்.

"என்ன கயல் திடீரென வர சொல்லிருக்க " என்ன மஹியை பார்க்க பிடிக்காமல் திரும்பி நின்றவாறே பேச துவங்கினாள் கயல்.

நிழல்(completed)Donde viven las historias. Descúbrelo ahora