நிழல் 28

2.8K 139 21
                                    

ஞாயிறு காலை மணி 8,
சிந்துவின் தந்தையும், மஹியின் தந்தையும் வேட்டி சட்டையில் கிளம்பி வெளியே வந்தனர்,
" திலகா டிபன் கொண்டு வா..." மஹியின் தந்தை குரல் கொடுக்க,
டிபனுடன் சமையலரை விட்டு வெளியே வந்தாள் திலகா.

"ஏங்க இரண்டு பேரும் நம்ம ஆபீஸ் போகலயா? வேட்டி சட்டையோட வந்திருக்கிங்க" திலகா கேட்க,
" இல்ல அண்ணீ, தங்கச்சி வீட்டுக்கு போயிட்டு இந்த சிந்து விசயத்த கொஞ்சம் பேசிட்டு வந்துரலாம்னு தான் கிளம்பிட்டோம்" என்றான் சிந்துவின் தந்தை.

"ஓ சரி சரிங்க, போகும் போது கேக் எதாவது வாங்கிட்டு போங்க , புஸ்பா இருப்பா வீட்டில " என்றாள் திலகா.

புஸ்பா, சிந்துவின் அத்தை மகள், அவளை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் செல்லப்பெண், எனவே அத்தைகளான திலகாவும் அகிலாவும் பலகாரங்கள் எல்லாம் கொடுத்து அனுப்பினர்.

பல நாட்களாக சரியாக தூங்காத மஹி, இவர்கள் கிளம்பி செல்லும் வரை எழவில்லை, மஹியிடம் சொல்லிடு திலகா, நாங்க கிளம்பறோம் என கூறிவிட்டு இருவரும் புறப்பட்டனர்.

மஹியை பார்த்து அவனுக்கு என்ன பிரச்சனை என விசாரிக்கலாம் என சிந்து மஹியின் அறைக்கு சென்றாள்.

மஹி தூங்கிக்கொண்டிருந்ததைப் பார்த்தவள் பிறகு வரலாம் என திரும்பினாள்.

"சொல்லு சிந்து, நான் சும்மா தான் படுத்திருந்தேன்" என குரல் கொடுத்தான் மஹி.

"அண்ணே, உனக்கு என்ன பிரச்சனை சொல்லு, என்னால முடிஞ்சத நான் செய்யரேன்" என கூறினாள் சிந்து.

தங்கையின் மடியில் படுத்துக்கொண்டு அழத்துவங்கினான் மஹி, பின் நடந்தது அனைத்தயும் கூறினான்.

"பேசினால் தான் அண்ணா பிரச்சனை தீரும், நீ ஒரு முறை கயல் அப்பா கிட்ட பேசு, எல்லாம் சரியாகும் " என ஆறுதல் கூறினாள்.

"சரிமா, நான் பேசிப்பார்க்கிரேன் " என்றான் மஹி.

மதியம் 3 மணி,

கயலின் தொலைப்பேசிக்கு அழைத்தான் மஹி,

" நான் உன் அப்பா கிட்ட பேசனும், போனை அவர் கிட்ட கொடு" என்றான்.
முதலில் சற்று தயங்கியவள் பின் மஹி பேசினாளாவது அப்பா மாறுவாரா என பார்ப்போம் என்ற ஏக்கத்தில் போனை அவரிடம் கொடுத்தாள்.

"ஐயா..."-- மஹி,

" சொல்லுங்க தம்பி"--கயலின் தந்தை.

"என்ன பேசறதுனு தெரியல ஐயா, உங்க சம்மதத்தோட எங்க திருமணம் நடக்கனும், நீங்க மறுக்காம அனுமதி தரனும்" மஹி கூற,

" தம்பி, உனக்கு கயல் இல்லைனானும் வேற பொண்ணு கிடைக்கும், திருமணம் நடக்கும், ஆனா இந்த பயலுக்கு இனி யாரும் பொண்ணு தர மாட்டாங்க சாமி, அவன் என்னையும் நான் சொன்ன வார்த்தையும் நம்பி மூனு வருசமா இருக்கான் ஐயா, நீ படிச்ச புள்ள புரிஞ்சிப்பனு நம்பரேன், மனைவினு ஒருத்தி இல்லாம தனியா வாழர கொடும என்னனு எனக்கு தான் தெரியும் சாமி" என்று கூறிவிட்டு அழ துவங்கினார் கயலின் தந்தை.

மறுவார்த்தை பேச முடியாதவனாய் அழைப்பை துண்டித்தான் மஹி.

சிந்துவின் அத்தை வீடு:

"வாங்க வாங்க" அன்புடன் புஸ்பா அழைக்க மாமன்மார் இருவரும் வீட்டிற்குள் சென்றனர்.
வாங்க அண்ணே, எல்லாரும் சுகமா?
நலம் தான் மா.... நீ எப்படி இருக்க, உன் பையன் எங்க ?, என்ன செய்யரான்? மஹியின் தந்தை விசாரித்தார்.

"அவன் ஏதோ ப்ராசக்ட் பண்ணணும்னு டவுனுக்கு போயிருக்கான், காலேஜு கடைசி வருசம் இல்ல அதான்" என்றாள் சற்று பெருமையாக.

ம்..ம்ம்.... தலையசைத்தார் மஹியின் தந்தை.

சொல்லுங்கண்ணே, திடீரென கிளம்பி வந்திருகிங்க... ஏதாது விசேசமா ?? என கேட்டாள்.

"அது தான் எப்படி சொல்லரதுனு தெரியல தாயி, நம்ம சிந்து அவ கூட படிக்கிற பையன விரும்புரதா சொல்லரா, தம்பி உனக்கு முன்னடியே வாக்கு கொடுத்திருக்கான், அதான் என்ன செய்யறதுனு புரியல..." என கூறி முடித்தார் மஹியின் தந்தை.

" அண்ணே, நல்லதுண்ணே.... இப்பவே சொல்லிட்டது நல்லது.... நாளைப்பின்ன கல்யாண கழிச்சி, எனக்கு பிடிக்கல கட்டாய கல்யாணம் அப்டி இப்டினு சொல்லுச்சினா எல்லாருக்கும் சங்கடம், இப்பவே சொன்னது பரவால அண்ணே" என்று கூறி முடித்தாள்.

"உனக்கு கஷ்டம் இருக்கும் தான், மன்னிச்சிரு " என இரு அண்ணண்களும் எழுந்து கைகூப்பி வணங்கினர்.

அண்ணே...நீங்க ஏன்னே மன்னிப்பு எல்லாம் கேட்டுக்கிட்டு, விடுங்க கடவுள் யாருக்கு யாருனு முடிவு பண்றாரோ அதான் நடக்கும்.

நல்லதுமா... அப்போ நாங்க கிளம்பறோம், இன்னோரு நாள் வரோம் .... இருவரும் கூற,

சரிங்கண்ணே வாங்க என வழி அனுப்பி வைத்தார் சிந்துவின்அத்தை.

நிழல்(completed)Tempat cerita menjadi hidup. Temukan sekarang