நிழல் 3

5.1K 170 41
                                    

மஹியும் சிந்துவும் கார்டனை நோக்கி நடந்தனர் ..
அங்கிருக்கும் வேப்பமரத்தினை பார்க்காமல் இருவரும் இருந்ததில்லை. குரைந்தது ஒரு மணி நேரமாவது தினமும் அவர்கள் மரத்தடியில் அமர்ந்திருப்பார்கள்.

"அண்ணா... என் ப்ரண்ட் கயலை பத்தி உங்ககிட்ட சொல்லிருக்கேன இல்லையா? இன்னைக்கி அவ செல்ப் இன்ட்ரோ பன்னப்ப அவளை நீங்க தெரிஞ்சிகிட்டீங்களா ? " என்றாள் சிந்து.

"உம்.. பார்த்தேன் டா, அவளோடைய தமிழ் அழகாக இருந்தது " என்றான் மஹி.

மஹியின் வார்த்தைகளை கேட்டவுடன் மடையினை உடைத்து கொண்டு வரும் தண்ணீர் போல ஒரே பாய்ச்சலாக பேச துவங்கினாள் சிந்து.

"அண்ணா.... நானும் அவளின் தமிழுக்கு அடிமை, தேர்ந்தேடுத்த பூக்களை கொண்டு பூ கட்டுவது போல .... தேர்ந்தெடுத்த வார்த்தைகளை கொண்டு நிதானமாக பேசுவாள். தேனினும் சுவையானவள் " என்றாள் கயல்.

"போதுமம்மா... உன் தோழிக்காக உயிரையும் தருவாய் போல.." என்று கிண்டல் செய்தான் மஹி.

"அண்ணா "... என முனங்கியவளாய் மஹியின் கைகளில் ஒரு கில்லு கில்லினாள் சிந்து.

மெல்லிய தென்றல் காற்று தன் மேனியை தடவியதை உணர்ந்த மஹி,
"வா டா உள்ளே போலாம் ... டைம் ஆகிருச்சி , பனி இறங்குது" என்றான் மஹி.

சற்று பெரிய டைனிங் டேபுலில் , வரிசையாக உணவு வைக்கப்பட்டு இருந்தது... தாளித்த சட்டியின் வாசமும் சூடான இட்லியின் மணமும் மஹியின் பசியை மேலும் தூண்டியது.

"அம்மா, அப்பா ஆபீஸ்ல இருந்து வந்துட்டாரா? ஏன் இன்னும் சாப்பிட வரல " என வினாவினான் மஹி.

"இல்லடா.... வர லேட் ஆகுமாம் , போன் பன்னாரு " என்று கூறிக்கொண்டே சிந்துவின் தட்டில் மூன்று இட்லியையும் , மஹியின் தட்டில் நான்கு இட்லியையும் வைத்தாள்.

இருவரும் சாப்பிட்டு முடித்ததும் அவரவர் அறைக்கு சென்றனர்.

ஏன் இந்த கல்லூரி பாடம் மட்டும் படிக்கவே மனம் செல்வதில்லை... "சிவகாமி சபதம், பொன்னியின் செல்வன், ஜெயகாந்தன் கதைகள்"...இதெல்லாம் படிக்கும் போது புத்தகத்தை விட்டு வெளியே வர மனமில்லை,ஆனால் கல்லூரி பாடம் மட்டும் ஏன் இப்படி வேப்பங்காயாய் கசக்குது? தீவிரமாக யோசித்தாள் சிந்து.

ஏன் என புரிந்தபாடில்லை, சரி வழக்கமாக செய்யும் வேலையை செய்வோம் என போர்வையை இழுத்து தன் முகம் வரை போர்த்திக்கொண்டு சொர்கலோகம் சென்றடைந்தாள் சிந்து.

தன் அறையின் ஜன்னல் கதவை திறந்து விட்டு, கட்டில் மீது அமர்ந்தான் மஹி. வெண்நிற வட்ட நாயகியான நிலா தன் மெல்லிய ஒளியை மஹியின் அறையினுள் பரவவிட்டது.

தன் கைகளில் வைத்திருந்த ஆங்கில புத்தகத்தினை மேசை மீது வைத்து விட்டு ஜன்னல் பக்கம் சென்றான்.

வானொலியில் பாடல்களை கேட்டவாரே வெளியே பார்த்தான் ... மெல்லிய காற்றில் ஒவியம் போல் கயலின் முகம் நினைவிற்கு வந்தது. ஒரு நிமிடம் கண்களை கசக்கி பின் மீண்டும் பார்த்தான். அப்பொழுது ஏதும் தெரியவில்லை.

சிந்து கயலை பற்றியே நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தால் அல்லவா , அதனால் தான் இப்படி சிறு பார்வை தடுமாற்றம் என தனக்குள்ளே கூறிக்கொண்டு படுக்கையில் விழுந்தான்.

நிழல்(completed)Donde viven las historias. Descúbrelo ahora