நிழல் 22

3.3K 138 32
                                    

மஹியின் நிலையை கண்டு கவலைப்பட்டது திலகா மட்டுமல்ல, சிந்துவின் அம்மா அகிலாவும் தான்.

மஹியின் அனைத்து பிரச்சனைக்கும் முக்கிய காரணம் தான் வாங்கிய சத்தியம் தான் என அகிலா தனக்குள்ளே நோந்துக்கொண்டாள்.

சிந்துவின் அன்னை (முதல் அன்னை) இறந்த போழுது, சிந்துவிற்கு 6 வயது, அவளை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ள சிந்துவின் தந்தை அகிலாவை திருமணம் செய்தார்.

அகிலாவிடம் சிந்துவின் தந்தை அப்போது கூறிய வார்த்தைகளில் மிக முக்கியமான ஒன்று, சிந்து வளர்ந்து பெரியவள் ஆனதும் அவளை தன் தங்கை மகனுக்கு திருமணம் செய்து தர வேண்டும், அவளை ஒழுக்கத்துடன் வளர்ப்பது உன் கடமை என வாக்குகொடு என கேட்டு அகிலாவிடமிருந்து வாக்கு வாங்கினார் சிந்துவின் தந்தை.

கணவரிடம் அளித்த வாக்கை காப்பாற்ற அகிலா அன்றே முடிவெடுத்தாள், சிந்துவை கண்ணும் கருத்துமாக வளர்த்தாள்.

அனைத்தையும் தன்னிடம் பகிர்ந்துக்கொள்ளும் சிந்து, சில தினங்களாக எதையோ மறைப்பதை உணர்ந்தாள்.

மஹியிடம் உதவி கேட்டாள், ஆர்யா சிந்து விசயத்தை தெரிந்துக்கொண்டாள்.

இதற்கு முன் சிந்துவின் தந்தையின் எண்ணத்தை அறியாத மஹி, தங்கையை கண்டிக்கவில்லை.

ஒரு நாள் அகிலா , தன் கணவரின் வேண்டுகோளை மஹியிடம் பகிர்ந்துக்கொண்டாள்.

தனக்கு உதவி செய்வாயா? நான் அவரின் வாக்கை காப்பாற்ற வேண்டும், இதனை நான் செய்யவில்லை என்றால், இத்தனை நாள் சிந்துக்காக நான் வாழ்ந்த வாழ்க்கை பொய்யாகிவிடும் என கண்ணீர் பொங்க பேசிய சித்தியை சமாதானப்படுத்தினான் மஹி.

தானும் ஒரு பெண்ணை காதலிக்கிரோம், எப்படி தங்கையின் காதலுக்கு எதிர்ப்பு கூற முடியும் என மஹி மிக வருந்தினான்.

அனைத்து எண்ணங்களையும் தன் தாய் திலகாவிடம் பகிர்ந்தான்.

உன் நிலைமை மிகச் சிரமமான ஒன்று தான், ஆனால் அகிலாவிற்கு நம்மை விட்டால் யாரும் இல்லை, அவளுக்கு அவளுடைய வாக்கு முக்கியம், அதற்காக அவள் பல சங்கடங்களை கடந்து வந்திருக்கிறாள்.

நிழல்(completed)Where stories live. Discover now