சென்னையின் அந்த பிரம்மாண்ட திருமண மண்டபம் முழுவதும் செல்வந்தர்களும், அரசியல்வாதிகளும் நிரம்பியிருக்க எங்கும் எதிலும் ஆடம்பரமும் அலட்சியமுமே ஆட்சி செய்தது கொண்டிருந்தது.
சுதீப் சந்தர் வெட்ஸ் மாலினி என்ற பொன்னிற எழுத்துக்கள் அலங்காரமாய் மின்ன , பார்போரை பொறாமைப்படுத்தும் அழகுடன் சுதீப் மற்றும் மாலினியின் ஒய்யார புகைப்படமும் அதன் அருகே வைக்கப்பட்டிருந்தது.
மத்திய அமைச்சர் ராஜவேலுவின் மகனது நிச்சியதார்த்த விழா என்றால் சும்மாவா என்று எண்ணும் வகையில் மிகவும் பிரம்மாண்ட விழாவாக காட்சி அளித்தது.
நிச்சையத்திற்கே இவ்வளவு செலவு செய்தால் திருமணத்திற்கு கேட்கவா வேண்டும் என்று சிலரின் மனதில் பொறாமை எட்டிப்பார்கத்தான் செய்தது.அதையெல்லாம் பெரிதுபடுத்தாத ராஜவேலு தன் ஆசைக்குரிய தலைமகனின் திருமணத்தை எண்ணி மகிழ்ந்திருந்தார்.
ஒரு பக்கம் வகை வகையான பல நாட்டு உணவுகள் உண்ண ஆள் இல்லாமல் ஏங்கிக் கிடக்க மறுபக்கமோ பணத்தை மட்டுமே நினைக்கும் கூட்டம் நாலாபக்கமும் தங்களின் விலைஉயர்ந்த உடைமைகளை குறித்து பெருமைபட்டுக்கொண்டிருந்தன.
இவை எதையும் உணரும் நிலையில் இல்லாத இரு உள்ளங்கள் தங்களின் வருங்கால வாழ்க்கையை கண்களால் பேச அவர்களை சுற்றியிருந்த நண்பர்கள் கூட்டம் அவர்களின் காதலை கேளி செய்தும் கிண்டல் செய்தும் அவர்களை சங்கப்படுத்தினர்.
நிச்சியத்தித்தை உறுதி செய்யும் பத்திரிக்கை வாசிக்கப்பட்டது. அன்றிலிருந்து சரியாக ஏழாம் சுபமுஹூர்த்த தினத்தில் சுதீப் மாலினியின் திருமணம் பெரியோர்களால்நிச்சயிக்கப்பட்டது.
நடக்கப்போகும் நல்ல காரியத்தை குறித்து அனைவரும் மகிழ்திருக்க ஒரு நெஞ்சம் மட்டும் உள்ளுக்குள் இன்னதென்று கூற முடியாத நிலையில் கொதித்துக்கொண்டிருந்தது.அதே நேரம் சென்னை கமிஷனர் அலுவலகம்
அது ஒரு திங்கட்கிழமை என்பதால் சென்னை கமிஷனர் அலுவலகம் மிகுந்த பரபரப்புடன் இருந்தது.வலக்கத்தை விட கூடுதல் பரபரப்பிற்கு காரணம் அந்த அலுவலகத்தின் க்ரைம் பிரான்ச் புதிய கமிஷனரை எதிர் நோக்கி காத்திருந்தது.
YOU ARE READING
மூன்றாம் கண்( முடிவுற்றது)
Mystery / Thriller#1 in mystery/ thriller for many days இதுவரை நான் எழுதியதிலிருந்து மாறுபட்ட தலைப்பில் எழுத விரும்பினேன்.உங்களுக்கு பிடித்திருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.தவறு இருந்தால் சுட்டிக்காட்ட தயங்க வேண்டாம். நம் உடலின் உறுப்புகளில் கண் மிகவும் இன்றியமையா...