தன் அறையின் சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்த செழியன் சித்தார்தின் குரல் கேட்டு தன் சிந்தனையிலிருந்து வெளி வந்தான்.
" சார்....நீங்க சொன்ன மாதிரி அந்த முருகன திரும்ப செல்ல வைச்சு பூட்டிடேன். அவன் மேல ஒரு கண்ணு வைச்சுக்க சொல்லி கான்ஸ்டபிள் செந்திலுக்கு உத்தரவு போட்டுடேன்."என்று கூறி பதிலுக்காக செழியனின் முகம் பார்த்து காத்திருந்தான்.
"நீங்க வீட்டுக்கு போகனுமா??இல்ல கொஞ்ச நேரம் கழிச்சு போகலாமா சித்து??" என்ற செழியனின் கேள்விக்கு, " இல்லை சார் அவசரம் இல்லை, சொல்லுங்க சார் ,"என்று பணிவுடன் கேட்டான்.
" முருகனோட வாக்குமூலம் உங்களுக்கு ஞாபகம் இருக்கா??," என்று சித்தார்தை பார்த்து வினவினான்.
" ம்...இருக்கு சார் ,
சுதீப் இண்டர்காம் மூலமா கூல்டிரிங்க் கேட்டதாகவும் இவன் கொண்டு போய் கொடுக்கும்போது அது கீழ விழுந்துட்டதாகவும் முதல்ல சொன்னான்.
அப்பறம் சுதீப் கேட்டாரு ஆனால் கூல்டிரிங்க் வீட்ல இல்லை அதை சொன்னா திட்டுவாருனு பயந்து பயந்து போனேன் அப்போ அமைச்சர் தன் பையனோட பேசிக்கிட்டு இருந்ததாக சொன்னான். அப்பறம் அமைச்சர் கொடுத்த கூல்டிரிங்க் தான் இவன் கொண்டு போய் கொடுத்ததா சொன்னான் சார்." என்று கூறினான்.
" ம் முதல் விஷயமே தப்பு சித்து அமைச்சரோட வீட்ல இண்டர்காம் வேலை செய்யலை , இதை நம்ம நேரலயே பார்தோம், அப்பறம் அவன்கிட்டு ஒரு தடுமாற்றம் இருக்கு, கண்ணில ஒரு கள்ளத்தனம் தெரியுது,அதனால அவன் சொல்றது எல்லாதையுமே நம்ம நம்ப முடியாது , பார்களாம் நாளைக்கு கைரேகை அறிக்கை வந்திடும் அதையும் சேர்த்து வைச்சு பார்கனும்," என்று கூறியவன், அமைதியாக தன் இருக்கையில் கண் மூடி அமர்ந்திருந்தான்.
அவன் ஏதோ சிந்தனை வசப்பட்டிருக்கிறான் என்பதை அவனது சுருங்கியிருந்த நெற்றி உணர்ந்த சித்தார்த்," சார் நீங்க வீட்டுக்கு போகலையா??"என்று தயங்கி தயங்கி கேட்டான்.
YOU ARE READING
மூன்றாம் கண்( முடிவுற்றது)
Mystery / Thriller#1 in mystery/ thriller for many days இதுவரை நான் எழுதியதிலிருந்து மாறுபட்ட தலைப்பில் எழுத விரும்பினேன்.உங்களுக்கு பிடித்திருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.தவறு இருந்தால் சுட்டிக்காட்ட தயங்க வேண்டாம். நம் உடலின் உறுப்புகளில் கண் மிகவும் இன்றியமையா...