கமிஷனர் அலுவலகம் தன் வழக்கமான சுறுசுறுப்புடன். இயங்கிக்கொண்டிருக்க அதன் உள்ளே மூவர் மிகவும் குழப்பத்துடனும் பயத்துடனும் நுழைந்தனர்.
அவர்களை தடுத்த ஒரு காவலர்," யாரு நீங்க ???யார பார்கனும்??" என்று மிரட்டும் தொனியில் வினவினார்.
அந்த மூவரில் ஒருவன்," நாங்க சித்தார்த் சாரை பார்க வந்திருக்கோம்," என்றான் சற்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு.
அவன் அவ்வாறு கூறவும் சித்தார்த் அங்கே வரவும் சரியாக இருந்தது அவர்கள் மூவரையும் கேள்வியாக பார்த்தவன்," நீங்க.....??"என்றவன் தன் வினாவை பாதியிலேயே நிறுத்திக்கொண்டான்.
அவனது கேள்வியை புரிந்தவர்கள்," நாங்க சுதீபோட ப்ரெண்ட்ஸ்..,எங்க சுதீப் க்கு என்ன ஆச்சு??"என்று உண்மையான அக்கறை முகத்தில் தெறிய வினவினான்.
" ஓ...... நீங்க இங்கயே காத்திருங்க , கமிஷனர் சார் உங்ககிட்ட எல்லாம் விவரமா சொல்லுவாறு , " என்று கூறி அவ்விடம் விட்டு நகர்ந்தான்.
முதன்முறையாக காவல்துறை வந்ததாலும் தங்களின் நண்பனை காணாததாலும் அந்த மூவரும் சிறிது கலக்கத்துடனே காணப்பட்டனர்.
அவர்களின் நடவடிக்கைகளை அவர்கள் அறியா வண்ணம் நோட்டமிட ஒரு கான்ஸ்டெபிளுக்கு உத்தரவிட்ட சித்தார்த் தன் அறை நோக்கி செல்கையில் அவனை தடுத்த துணை கமிஷனர்," பார்க்க பெரிய இடத்து பசங்க மாதிரி இருக்காங்க..யாரு இவங்க ?இங்க எதுக்கு கூட்டிட்டு வந்திருக்க? எங்கிட்ட அனுப்பு, நான் கவனிச்சுக்கிறேன்," என்று உத்தரவிட்டார்.
அவரின் உத்தரவை கேட்டு முதலில் திடுக்கிட்டவன் பின்," அது முடியாது சார்," என்றான் பவ்யமாக, வார்த்தையில் இருந்த அடக்கம் குரலில் இல்லாமல்.
" என்ன??? முடியாதா??"
"ஆமா சார், அவங்க கமிஷனரோட உத்தரவுபடி இங்க வந்திருக்காங்க, நீங்க எதுவா இருந்தாலும் அவர்கிட்ட பேசிக்கோங்க..."என்று மிடுக்காக கூறி தன் அறைக்குள் சென்றுவிட்டான்.

YOU ARE READING
மூன்றாம் கண்( முடிவுற்றது)
Mystery / Thriller#1 in mystery/ thriller for many days இதுவரை நான் எழுதியதிலிருந்து மாறுபட்ட தலைப்பில் எழுத விரும்பினேன்.உங்களுக்கு பிடித்திருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.தவறு இருந்தால் சுட்டிக்காட்ட தயங்க வேண்டாம். நம் உடலின் உறுப்புகளில் கண் மிகவும் இன்றியமையா...