தனது அறையில் கண்மூடி அமர்ந்து செழியனின் வருகைக்காக இத்தனை ஆண்டுகள் காத்திருந்ததையும் அவ்வப்பபோது அவனின் நினைவு தன்னை வாட்டும் நேரம் அவனது நிழல்படத்தை கண்டு அமைதியுற்றதையும் எண்ணிய வண்ணமிருந்த பூங்குழலி கதவு தட்டப்படும் ஓசையில் சுயநினைவு கொண்டாள்." யெஸ் கம்மின் ,"என்று கூறியவள் உள்ளே நுழைந்த செழியனை கண்டு சிலையானாள்.அவனது வரவை அவள் எதிர்பார்க்கவில்லை என்பது அவளது முகத்திலிருந்தே தெரிய அவளை பார்த்து அழகாக சிரித்த செழியன்," உள்ள வரவா??அப்படியே போய்டவா??" என்று வினவினான்.
" ஐயோ...சாரி உள்ளே வாங்க நீங்க வருவீங்கனு நான் எதிர்பார்கலை அதான் கொஞ்சம் ஷாக் ஆகிட்டேன், ப்ளீஸ் உட்காருங்க," என்று உபசரித்தவள் செழியனின் பின்னே வந்த ராமை கவனிக்கவில்லை.
அவன் அவளின் எதிரிலுள்ள நாற்காலியில் கம்பீரமாக அமர அவனை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் அந்த பாவை.காக்கி நிறத்தில் பேன்ட் அணிந்து மெரூன் வண்ணத்தில் ஃபுல் ஹான்ட் சர்டையை சிறிது மடக்கி விட்டிருந்தான். அலை அலையான கேசம் காற்றில் ஆடி அவளின் கையை வந்து வருடும்படி அழைப்பு விடுக்க கூர்மையான அவனின் கண்களில் கடுமைக்கு பதில் சாந்தம் நிலவ அவளின் பார்வையை காந்தமென கவ்விக்கொண்டது. ஆண்மைக்கே உரித்தான அழகிய கரிய மீசை அவனின் இறுகிய உதட்டின் மேலே சிம்மாசனமிட்டு அவளை இம்சித்தது.
தன்னிலை மறந்து செழியனை நோக்கி கொண்டிருந்த குழலியின் பார்வை செழியனை இம்சிக்க அமைதி காக்க முடியாதவன் அவளை ஆராயத்த தொடங்கினான்.
பாலில் சந்தனம் கலந்த நிறத்தில் வட்டமுகத்தையுடயவளின் புருவங்களின் நடுவில் சிறிய ஸ்டிக்கர் பொட்டு அமர்ந்திருக்க வேல்போன்ற கூர்மையான விழிகளில் செழியனை விழுங்கி விடுவது போல பார்தவள் ஆகாய வண்ணத்தில் நேர்தியாக அயர்ன் செய்த காட்டன் புடவையில் தேவதையென மிளிர்ந்தாள் அவளை காண செழியனுக்கு தெகிட்டவில்லை.
இருவரும் தங்களது தனி உலகில் மூழ்கியிருக்க ராமின் செருமல் கேட்டு சுயநினைவு கொண்டவர்களின் நிலை சங்கடமாகவே இருந்தது.
YOU ARE READING
மூன்றாம் கண்( முடிவுற்றது)
Mystery / Thriller#1 in mystery/ thriller for many days இதுவரை நான் எழுதியதிலிருந்து மாறுபட்ட தலைப்பில் எழுத விரும்பினேன்.உங்களுக்கு பிடித்திருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.தவறு இருந்தால் சுட்டிக்காட்ட தயங்க வேண்டாம். நம் உடலின் உறுப்புகளில் கண் மிகவும் இன்றியமையா...