பகுதி 4

1.1K 97 63
                                    

தன்னுடைய உரையை முடித்ததும் வேகமாக உள்ளே சென்று மறைந்த அமைச்சரை பார்த்த செழியனின் கண்களில் சந்தேகம் தெரிந்தது.

அவரையும் அவரின் உரையையும் மனதிற்குள் ஆராய்ந்து கொண்டிருந்த வேளையில் சித்தார்தின் குரல் அவனின் சிந்தையை தடை செய்தது," சார் ஆம்புலன்ஸ் டிரைவர வர சொன்னீங்க, உங்களுக்காக அவரு காத்திருக்காரு,"என்ற முறையிடுதலுடன்.

" ஆமா சித்தார்த், எங்க அவரு?, கூப்பிடுங்க,"

" இதோ சார்," என்று கைகளை காட்டினான் சித்தார்த், ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் கைகளை கட்டி பவ்யமாக செழியன் முன் வந்தார்.

" நீங்க எந்த ஆஸ்பத்திரி க்கு கொண்டுபோவீங்க??"

" ஐயா, நாங்க ஜவஹர் ஆஸ்பத்திரி ஆம்புலன்ஸ் ங்க அங்கதான் போவனும்," என்று கூறினார்.ஒரு நிமிட யோசனைக்கு பிறகு," சரி அங்க டாக்டர் கோபால் உங்களுக்காக காத்திக்கிட்டு இருப்பாரு, அவர் கிட்ட ஒப்படிச்சுடனும், இது பெரிய இடத்து விஷயம் , வெளிய தெரியக்கூடாது, புரிஞ்சதா??"என்ற செழியனின் தோரனையில் அந்த முதியவர் சத்தமில்லாமல் விடைபெற்றார்.

தன் மொபைலை எடுத்த செழியன் யாரையோ அழைத்தான், அந்த பக்கம் அழைப்பு ஏற்க்கப்பட்டதும்," ஹலோ டாக்டர் கோபால்?? நான் செழியன் பேசறேன், " என்று உரையாடலை தொடங்கிய செழியன் தான் கூற வேண்டிய விஷயத்தை சுருக்கமாக கூறிவிட்டு," சரி அப்ப உங்களோட கன்ஃபர்மேஷன் காலுக்காக ( confirmation call) நான் காத்திருக்கிறேன்", என்று கூறி கால் ஐ கட் செய்தான்.

அவனையே பார்த்துக்கொண்டிருந்த சித்தார்தை நோக்கியவன் ," இந்த வீட்ல மொத்தம் எத்தனை பேர் வேலை செய்றாங்க?" என்று வினவினான்.

அதுவரை செழியனின் மர்மமான செயல்களை பற்றி யோசித்துக்கொண்டிருந்தவன் தன்னிலை அடைந்து," தோட்ட வேலைக்கு மூனு பேரு, வீட்டை சுத்தப்படுத்த மூனு பேரு, சமையல் வேலைக்கு இரண்டு பெண்கள் அப்பறம் வண்டியோட்ட மூனு பேரு, வாசல் காவலுக்கு நாலு பேரு , மொத்தம் 15 பேரு இருக்காங்க சார், இதுல சமையலுக்கு2 பெண்கள், வீட்டு பராமரிப்புக்கு 1 பெண் ஆக மூனு பெண்கள்,இந்த பதினைஞ்சு பேருக்கும் ஒரு மேனேஜர் அவரு பேரு மனோஜ்" என்று கூறி முடித்தான்.

மூன்றாம் கண்( முடிவுற்றது)Where stories live. Discover now