" என்னடா சுதீப் சந்தர காணோம்.ஆனால் இவரு.இவ்ளோ உற்சாகமா பேசுறாரு அப்படீனு நீங்க நினைக்கிறது எனக்கு புரியுது. இந்த கேஸ் உண்மையிலயே எனக்கு ரொம்ப சவாலா இருந்துச்சு குற்றவாளியை நெருங்குற மாதிரி.இருக்கும் ஆனால் திடீரென தொடங்குன இடத்துலயே கொண்டு வந்து நிறுத்திடும், இப்ப இந்த கேஸை நான் ஸால்வ் பண்ணிட்டேன். " என்று நிறுத்திய செழியன் அங்கிருந்த அனைவரின் முகங்களையும் நோட்டமிட்டான்.
பின் மெதுவாக ரித்தீஷை நோக்கியவன்," ஏன் இப்படி செஞ்ச ?? பேசி தீர்க்க முடியாத விஷயம் னு எதுவுமே இல்லை அதைவிட்டு எதுக்காக இப்படி செஞ்ச??" என்று வினவினான்.
அங்கிருந்த அனைவரின் விழிகளும் ரித்தீஷை நோக்க , அமைச்சர் அவனை நோக்கி எழுந்ததை பார்த்த செழியன் வேகமாக அவரை தடுத்து," நான் சொல்ற வரைக்கும் யாரும்.பேசவோ இருக்கிற இடத்தில இருந்து அசையவோ கூடாது," இது என்னோட கட்டளை என்று கூறினான்.
இப்பொழுது ரித்தீஷை பார்த்தவன்," சொல்லு ரித்தீஷ் ஏன் இப்படி.பண்ண??" என்று மீண்டும் வினவினான்.
" சார் நீங்க என்ன சொல்றீங்கனு எனக்கு புரியலை , நான் என்ன பண்ணுணேன்??இங்க என்ன நடக்குது??" என்று குழப்பத்துடன் வினவினான்.
" புரியாத மாதிரி நடிக்கிறதால எந்த பிரயோஜனமும்.இல்லை ரித்தீஷ் சுதீபோட இந்த நிலைங்கு காரணம் நீதானு நிரூபிக்க என்கிட்ட எல்லா ஆதாரமும் இருக்கு,கமான்....."
" சார் ப்ளீஸ்.....சத்தியமா நீங்க என்ன சொல்றீங்க னு எனக்கு புரியலை நான் எந்த தப்பும் பண்ணலை இதை என்னால உறுதியா சொல்ல முடியும் , " என்று மீணடும் கூறினான் இம்முறை அவனது குரலில் சிறு நடுக்கம் இருந்தது.
அங்கிருந்த அனைவரும் நடப்பதை புரியாமல் பார்த்துக்கொண்டிருக்க செழியனோ," கான்ஸ்டபிள் இவரை.கொண்டு போய் லாக்அப்ல வைங்க நம்ம கேக்குற விதத்தில கேட்டா உண்மை தானா வெளிய வரும் ," என்று கூறினான்.
அந்த அறையின் ஓரத்தில் நின்றிருந்த காவலர் ஒருவர் ரித்தீஷை நோக்கி வர யாரும் எதிர்பாரா வண்ணம் வேகமாக.எழுந்த உமேஷ் ," சார் அவன் தான் எதுவும் பண்ணலை னு சொல்றான் ல அவனை விடுங்க உங்களுக்கு உங்க கேஸை முடிக்கனும் னா ஒரு நிரபராதிய குற்றவாளி ஆக்கலாமா??" என்று தன் நண்பனிற்காக பறிந்து பேசினான்.
YOU ARE READING
மூன்றாம் கண்( முடிவுற்றது)
Mystery / Thriller#1 in mystery/ thriller for many days இதுவரை நான் எழுதியதிலிருந்து மாறுபட்ட தலைப்பில் எழுத விரும்பினேன்.உங்களுக்கு பிடித்திருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.தவறு இருந்தால் சுட்டிக்காட்ட தயங்க வேண்டாம். நம் உடலின் உறுப்புகளில் கண் மிகவும் இன்றியமையா...