பகுதி -2

1.3K 94 77
                                    

கமிஷனராக இளஞ்செழியன் பதிவியேற்று இன்றுடன் ஒருவாரம் முடிவடைந்த நிலையில் அவனின் செயல்பாடுகள் அங்குள்ள அனைவரையும் மிரள செய்தது.

அந்த க்ரைம் பிரிவில் வேலை செய்யும் அனைவரின் குடும்பம் முதல் அவர்களின் நடத்தை வரை அனைத்தையும் அறிந்து வைத்திருந்தான்.அவனின் கண்பார்வையிலிருந்து தப்பிப்பது அவ்வளவு சாதாரண விஷயமாக இல்லாமல் இருந்தது.

அவனை யாரும் நெருங்க முடியாத அளவு நெருப்பாக அவன் இருந்தான். அவனின் செயல்களில் நேர்த்தியும் யாருக்கும் அடங்காத நேர்மையின் நிமிர்வும் ஒளிர்ந்தது.

சென்னையில் நடந்த கலவரங்களையும் களவுகளையும் ஒரே வாரத்தில் அடக்கி வைக்க அவன் திரையுலக நாயகன் அல்லவே. கொஞ்சம் கொஞ்சமாக அவனது பிரிவை அவனது கட்டுக்குள் அடக்கி வைத்துக்கொண்டிருந்தான். அதன் பலனாக க்ரைம் பிரிவில்.வேலை செய்பவர்கள்.அன்பளிப்பு வாங்குவது சுத்தமாக நின்று போனது. இதனால் சிலர் அவன் மீது வெறுப்பு கொண்டிருந்தாலும் அதை வெளிப்படுத்த தக்க சமயம் நோக்கி காத்திருந்தனர்.

அன்றும் வழக்கம்போல நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்க அங்கு வந்த ஒரு தொலைபேசி அழைப்பு அந்த வழக்கத்தை மாற்றி எல்லோரிடமும் ஒருவித பரபரப்பை ஏற்படுத்தியது.

**********

அந்த பெரிய வீட்டின் முன் " மத்திய அமைச்சர் ராஜவேலு " என்ற எழுத்துக்கள் மின்னியது. வீட்டின் வாயிலை அடைத்துக்கொண்டு பெரிய இரும்பு கேட் பூட்டியிருக்க அதன் முன்னே தங்களின் பெரிய மீசைகளை நீவியபடி இரண்டு செக்யூரிடிகள் நின்றுக்கொண்டிருந்தனர்.

அந்த கேட்டை அடைத்துக்கொண்டு பல விதமான கார்கள் நின்றுகொண்டிருந்தது. அதன் உள்ளே பலரும் அமர்ந்த வண்ணம் படபடப்புடன் காணப்பட்டனர், அதன் டிரைவர்கள் மட்டும் வாசலில் நின்றுகொண்டிருந்த செக்யூரிட்டிகளிடம் வாதம் செய்து கொண்டிருக்க அந்த விசுவாசிகளோ தங்கள் முதலாளியின் கட்டளையை மீற தயாராக இல்லை.

மூன்றாம் கண்( முடிவுற்றது)Where stories live. Discover now