"சொல்லுங்க மிஸ்டர் உதய் வேற எந்த விஷயத்தில உங்களை உங்களோட நெருங்கிய நண்பர் நம்பலை??" என்று தனது கேள்வியை மீண்டும் அழுத்தமாக கேட்டான் செழியன்.
" சார் அதெல்லாம் ரொம்ப பழைய பிரச்சனை இப்ப இந்த நேரத்தில அது எதுக்கு??" என்று தயங்கி கூறிய உதயை தன் கூர் விழிகளால் அளவெடுத்த செழியன் ," கேட்ட கேள்விக் பதில்," என்று கேட்டான் செழியன் கேட்டான் என்பதைவிட உறுமினான் என்ற சொல்லே சரியா இருக்கும்.
அப்பொழுதும் அமைதியாக இருந்த உதய், பின் மெதுவாக ," சார் நானும் சுதீபும் ரொம்ப க்ளோஸ் இரண்டுபேருக்கு நடுவுலயும் எந்த வித ஒளிவு மறைவேமே கிடையாது. ஆனால் இடையில என்ன ஆச்சுனே தெரியலை சுதீப் என்னை விட்டு விலகி போறமாதிரி ஒரு உணர்வு , நானா போய் பேசுனாலும் சந்தேகம் வராதமாதிரி பேசிட்டு போயிடுவான். இதுக்கு என்ன காரணம் யாரு காரணம்னு இன்னைக்கு வரைக்கும் எனக்கு தெரியலை," என்று குரலில் உண்மையான வருத்தம் தெரிய கூறினான்.
" ம்... அவன் உங்களை நம்பலை னா அப்பறம் ஏன் உங்ககூட சேர்ந்து கம்பெனி தொடங்கனும்?? "
" சார் இந்த கம்பெனி எங்க சின்ன வயசு கனவு அப்பவே நாங்க இந்த கம்பெனி பத்தி நிறைய பேசுவோம் பேரு கூட அப்பவே வச்சுட்டோம் அதனால அதுல இருந்து அவன் விலக நினைக்கலை னு நான் நினைக்கிறேன்."
" சரி ஆனால் உங்க மத்த இரண்டு நண்பர்களையும் ஏன் அதுல பார்னரா சேர்கலை??"
" உமேஷ்க்கு இதுல விருப்பம் இல்லை ரித்தீஷ்க்கு அவங்க அப்பாவோட தொழில பார்த்துக்கிறதுக்கே நேரம் சரியா இருக்கும்."
" சோ உங்ககூட தான் சுதீப் அதிக நேரம் இருந்திருக்காரு ?? இல்லையா??"
" ம்...அப்படியும் சொல்லலாம் சார்."
" சுதீப்க்கு தொழில்முறைல எதுவும் விரோதிகள் அப்பறம் சொந்தவாழ்க்கையில எதிரிகள் அந்த மாதிரி யாரும்.இருக்காங்களா??"
" இல்லை சார் எனக்கு தெரிஞ்சவரை அவன் விரோதிகளை சம்பாதிச்சுக்கமாட்டான்." என்று கூறிய உதயிடம் பொய்மை இருப்பது போல தெரியவில்லை, அதனால் சித்தார்தை அழைத்த செழியன்," சித்தார்த் உதய் யை ரூம் நம்பர் 7 ல உக்கார வைச்சுட்டு ரித்தீஷை வரச்சொல்லுங்க,"என்று கட்டளையிட்டான்.
![](https://img.wattpad.com/cover/111117346-288-k982311.jpg)
KAMU SEDANG MEMBACA
மூன்றாம் கண்( முடிவுற்றது)
Misteri / Thriller#1 in mystery/ thriller for many days இதுவரை நான் எழுதியதிலிருந்து மாறுபட்ட தலைப்பில் எழுத விரும்பினேன்.உங்களுக்கு பிடித்திருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.தவறு இருந்தால் சுட்டிக்காட்ட தயங்க வேண்டாம். நம் உடலின் உறுப்புகளில் கண் மிகவும் இன்றியமையா...