அத்தியாயம்-08

6.6K 269 26
                                    

விழித் தீண்டலில்
விஷமா தடவியிருக்கிறாய் - உன்
பார்வை தொடும் போதெல்லாம்
பதறி விதிர்த்து மரித்து - மீண்டும் உயிர்த்தெழுகிறேன்..

ருத்ராவின் வீட்டின் போர்டிகோவில் பைக்கை ஸ்டான்டில் போட்டு விட்டு நிதானமாய் நடந்தவனின் கண்களில் தோட்டத்து மாமரத்தின் அருகில் போட்டிருந்த பெஞ்சில் யசோ அமர்ந்திருப்பது தெரிந்தது. தோட்டத்தை நோக்கி நடந்தவன் அவள் அருகில் போய் நின்றான்.

இருள் சர்ப்பம் ஒளி இரையை நிதானமாக ருசித்து விழுங்கிக் கொண்டிருக்க ஆங்காங்கே இரத்த திட்டுக்களாய் கீற்றல்கள் நிறைந்த வானம். ஓர் கவிஞனின் ரசனையை உசுப்பிவிடுகிற மங்கலான மாலை நேரமது. சத்தம் கேட்டு திரும்பியவள் அங்கே எழிலை எதிர் பார்க்கவில்லை என்பது அவளது ஆச்சர்யமான விழி விரிப்பில் தெரிந்தது. என்ன..அப்படியொரு பார்வை என்றவாறு அவள் அருகில் அமர்ந்தான். திங்ஸ் த டெவில்...சொல்ல வந்ததை முடிக்காமல் அவள் சிரிக்க..அதாவது சாத்தானை நினை அதுவே வந்துவிடும் என்கிறாய்..அவனையும் சிரிப்பு தொற்றிக் கொண்டது.

சரீ..என்னைப் பற்றி என்ன நினைத்தாய்..சட்டென நினைவு வந்தவள் சாரி எழில்..மாமா இப்போதான் சந்தியா விஷயம் சொன்னார்..அங்கே கொஞ்ச நேரம் இருவருமே பேசிக் கொள்ளவில்லை.உண்மையில் ரகுதேவன் சொன்னதும் அவளுக்கு அப்படியொரு சந்தோஷம்...பின் தான் இவ்வளவு குரூரமானவளா என தன்னை நினைத்தே வெட்கியவள் எழிலுக்காக வருத்தப்பட்டாள். ஒன்றை அதிகம் நேசிப்பவர்களிடம் அது கிடைக்காது..தேவையற்றவர்களிடமே அது சேரும் விந்தையை மனப் பாரத்துடன் எண்ணிக் கொண்டிருந்தாள்.

தொண்டையை செருமி எழிலே பேச்சை துவக்கினான் ஐ வான்ட் டு டாக் வித் யூ..இதைப் பேசினதுக்கப்புறமா நீ என்னை என்ன நினைச்சாலும் பரவால்லை பட் நான் சொல்ல வந்ததை சொல்லியே ஆகணும் ஏன்னா பின்னாடி ஒரு நாளைக்கு கேட்காம விட்டுட்டோமேனு தோணக்கூடாது பாரு. குறிச்ச தேதியில் மேரேஜ் நடக்கும் கண்ணம்மா..அவன் குரலின் உறுதி அவளை உடைத்தது. ஒரு சந்தியா இல்லைனா ஒரு இந்திரா என்பதை அவள் ஏன் உணராமல் போனாள்.ஏதோ பேச நினைத்தாள் வார்த்தை வரவில்லை.. அவனையே பார்த்திருந்தாள். சொல்லில் அடைபடா சோகம் என அவள் எதிலோ படித்ததை இப்போது அனுபவிக்க முடிந்தது. நான் ஒரு முடிவு பண்ணிருக்கேன் அது நடந்தா ரொம்ப ப்(f)ரீயா சந்தோஷமா பீ(f)ல் பண்ணுவேன்.
அவள் முகத்தை பார்ப்பதை தவிர்த்தான். பெஞ்சை..மல்லிகை கொடியை..வானத்தை..மாறி மாறிப் பார்த்தவன்..சட்டென அவள் கண்களை பார்த்து வில் யூ மெர்ரி மீ.. நிதானமாய் கேட்டான்.

என்ன சொல்ல போகிறாய்..Where stories live. Discover now