உன் புன்னகையில் பொசுங்கி
சிரிப்புடன்
எரியும் தீ நான்
தித்திப்பாய் தகிக்கும்
தேன் நீ...!!மாலை நேரத்து காற்று தாமரைக் கேணியின் ஈரத்தினை குளிர்ச்சியாய் சுமந்து வீசிக் கொண்டிருந்தது.மேகாவும் இளாவும் குடிசைத் தாழ்வாரத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
ஏன்டீ உம்முன்னு இருக்க..கேட்ட மேகாவிடம் நாளைக்கு ஊருக்கு கெளம்பணும்டி..இங்க இருந்து போகவே மனசில்ல..இளா கவலையாய் கூற மதுவுடன் அங்கே வந்த ராதா ஆமாமா..கவலையாய் இருக்காதா பின்னே இங்கே இருக்கறப்போதானே உன் மாமனுக்கு மூடு வருது..சொல்லிச் சிரிக்க அவள் கையில் நறுக்கெனக் கிள்ளினாள் இளா. குழந்தையை வச்சிட்டு பேசற பேச்சை பாரு..அதுக்குன்னு இப்டியாடி கிள்ளுவ குரங்கே..அவர்கள் வழக்கடித்துக் கொண்டிருக்க விக்கி எழில் யசோ ருத்ரா..என எல்லோருமாய் அங்கு வந்து சேர்ந்தனர். நாளை இங்கிருந்து போவது பற்றி கவலையாய் பேச இங்கே இருக்கிற வரை ஹாப்பியாய் இருப்போமே என்ற விக்கியின் வாதம் ஏற்றுக் கொள்ளப்பட்டு மதுவின் விருப்பத்திற்காய் எல்லோரும் ஹைட் அன்ட் ஸீக் விளையாடுவதாய் தீர்மானிக்கப்பட்டது.
எல்லோரும் ஒளிந்து கொள்ள ராதா கண்டுபிடிப்பதற்காய் இருபது வரை எண்ணிக் கொண்டிருந்தாள். மதுவும் மேகாவும் கதவிற்கு பின்னால் ஒளிய யசோ மரத்தின் மறைவிலும் எழில் ஸ்டோர் ரூமிற்குள்ளும் ஒளிந்து கொண்டனர்.
கதவைத் திறந்த இளா மூலையில் மேகாவும் மதுவும் பதுங்கியிருக்க இங்கேயும் இருக்கறீங்களாடீ...அடக் கடவுளே எனக்கு மட்டும் ஒளிஞ்சுக்க இடமே கிடைக்க மாட்டீங்குது..புலம்பியவாறே பழைய சாமான்கள் போட்டு வைக்கும் ஓரளவான இரும்புப் பெட்டி கண்ணில் பட அதைத் திறந்து அதற்குள் இறங்கி பதுங்கி அமர்ந்து கொண்டாள். அதே பெட்டியை திறந்து உள்ளே இறங்கப் போன ருத்ரா இளாவைப் பார்த்ததும் திரும்ப எத்தணிக்க எட்டி அவன் கையை பற்றி ஐயோ சீக்கிரமா உள்ளே இறங்கு மாமா ராதாவுக்கு எண்ணி முடிஞ்சிடப் போகுது..அவள் சொல்லும் போதே ராதா பதினெட்டு...சொல்லுவது கேட்க அவனும் வேறு வழியின்றி உள்ளே குதித்து அவள் அருகிலே நெருக்கிக் கொண்டு அமர்ந்தான்.
YOU ARE READING
என்ன சொல்ல போகிறாய்..
Romanceஹலோ பிரெண்ட்ஸ்..இது நான் உங்களோட Share பண்ணிக்கிற என் முதல் நாவல்...Love story தான் பட் என்னோட Style ல சொல்றதால புடிச்சாலும் புடிக்கல்லனாலும் சொல்லிடுங்கப்பா..கதை பத்தில்லாம் நான் சொல்லப்போறதில்ல அத நீங்களே படிங்க..But நாவல்ல 2 ஹீரோ ஹீரோயின்ஸ்..கட்...