அத்தியாயம்-30

7.6K 273 19
                                    

மாட்டிக் கொண்ட மனசின்
இடுக்குகளிலெல்லாம்
ஒட்டி உலர்ந்து
உதிர்ந்திருக்கும்
ஒரு சில நினைவுச் சருகுகள்..

நிசப்தம் அந்த அறையினை நிரப்பியிருக்க ருத்ரா பெட்டிகளை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தான்..கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து அவனையே பார்த்திருந்தாள் இளா.
மாமா கொஞ்சம் பேசனும் இப்டி வந்து உட்காருங்க..வீட்டுக்குப் போயும் பேசிக்கலாம் முதல்ல திங்க்ஸ்லாம் எடுத்து ரெடி பண்ணு லஞ்சை முடிச்சிட்டு கிளம்பியாகணும்.எனக்கு இப்பவே பேசனும் வந்து உட்காருங்க..திரும்பி அவளை பார்த்தவன் அவளின் பிடிவாதமான தோற்றத்தில் ஒரு பெருமூச்சுடன் அவள் அருகில் சென்று அமர்ந்தான். ஹும்ம்...பேசு அவள் முகம் நோக்கினான்.

கொஞ்சம் மனசு விட்டு பேசலாமா
தேவா நான் உங்களை ரொம்பவும் லவ் பன்றேன் நீங்க இல்லாத ஒரு லைபை என்னால நினைச்சு கூட பார்க்க முடியாது..நம்ம இப்போ புருஷன் பொண்டாட்டி அது உங்களுக்கே தெரியும் நான் சொல்ல வேண்டியதில்லை..முதல்ல என்னை புடிக்காததனாலதான் விலகி போறீங்கனு நினைச்சேன்..பட் ரீசன்ட்டா நீங்க நடந்துக்கிறதை பார்க்கறப்போ புடிக்காத மாதிரி தெரியல மாமா..ஆனா ஒரு நேரம் நெருங்கி வர்ர நீங்க அடுத்த நிமிஷமே விலகி போய்டுறீங்க..உங்களுக்கு என்கிட்ட என்ன ப்ராப்ளம்..ப்ளீஸ் ஓபனா பேசுங்க..விழி விரித்து ஆவலாய் தன்னையே பார்த்திருந்தவளை பார்க்காது பார்வையை திருப்பினான்.

சொல்லுங்க தேவா என்ன ப்ராப்ளம்..ஜன்னல் பக்கமாய் வெறித்திருந்தவன் அவள் புறமாய் திரும்பி எனக்கே தெரியலை இளா..நான் ஏன் இப்டில்லாம் நடந்துக்கறேன் உன்னை எனக்கு புடிச்சிருக்கா இல்லையா..அவன் பேசுகையில் குறுக்கிட்டவள் புடிச்சிருக்கா இல்லையானு தெரியலையா..புடிக்காமதானா என்கிட்ட அவ்ளோ நெருக்கமா நடந்துக்கீட்டீங்க..அது..இளா நீயாதானே..அவன் சொல்லி முடிக்க முன் ஸ்டாப் இட்ட்ட்...அவள் கத்தியதில் அவன் திடுக்கிட கோபத்தில் அவள் அதரங்கள் நடுங்கின.

இப்டி பேச அசிங்கமாயில்லை..நானா வந்ததால அப்டி நடந்துக்கிட்டேன்னு சொல்ல வெட்கமாயில்லை அப்ப எந்தப் பொண்ணு உங்கிட்ட வந்தாலும் இப்டிதானா மாமா நடந்துப்ப..அறைஞ்சேன்னா பாரு கோபத்தில் கையை தூக்கியவன் அழுதபடி உடைந்து போய் நின்றிருந்தவளை கண்டு கைகளை இறக்கினான்..அவள் சொல்வதும் சரிதானே அவன் பேசிய அர்த்தம் ரொம்பவுமே தப்புதான்..சாரி இளா நான்..போதும் மாமா..சாரி.. போதும் மிஸ்டர் ருத்ரதேவன் எனக்குள்ளே இருந்த தூய்மையான அன்பை கேவலப்படுத்திட்டீங்க..உள்ள எதுவோ ஒன்னு நொறுங்கிப் போச்சு..தாங்க்ஸ் அழுதபடி வேகமாய் திரும்பி நடந்தவளை ஒரு கையாலாகாத் தனத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

என்ன சொல்ல போகிறாய்..Donde viven las historias. Descúbrelo ahora