அத்தியாயம்-34

7.2K 292 17
                                    

உன்
கண்ணாடி கனவுகளை
உடைத்தேனென
உரைக்கிறாய்..
நான் எறிந்தது
கற்களையல்ல கவிதைகளை
என்பதை உணராமலே..

வீட்டை சுற்றியுள்ள ஏரியாவில் தேடி களைத்துப்போய் அமர்ந்திருந்த எழிலிடம் கண்ணீருடன் புலம்பிக் கொண்டிருந்தாள் அவனின் அம்மா.
வயித்துல புள்ளைனு வேற சொல்றியேடா...கடவுளே..அவளுக்கு எந்த ஆபத்தும் வராம காப்பாத்து.
ஒரு வாட்டி அவ வீட்டுக்கு கால் பண்ணி பாரேன்..இல்லைம்மா ரொம்ப லேட் ஆகிடுச்சி அவ அங்க இருந்தான்னா பரவால்ல இல்லைனா அவங்களையும் கலவரப்படுத்தினா மாதிரி ஆய்டுமே..என்னதான் அம்மாவை சமாதானப் படுத்தினாலும் அதற்கு மேல் தாங்காது செல்லை அவன் எடுக்கவும் இளமதியின் அழைப்பு வரவும் சரியாக இருந்தது.

ஹலோ இளா..அவன் குரலில் இருந்த பதட்டத்தை உணர்ந்தவள் இங்கதான் வந்து உக்காந்திட்டு இருக்கா....கவலை படாதீங்கத்தான்.
தாங்க்ஸ் இளா அவ சாப்டலை முதல்ல சாப்ட வை இதோ நான் கிளம்பி வர்ரேன். அவ ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்கா..கன்சீவா இருக்காளாம் னு வேற சொல்றா வீட்ட விட்டு வந்துட்டேன்னு சொல்றா சந்தோசப்பர்ரதா கவலை படுரதான்னே தெரியல..அம்மா பொலம்பிட்டிருக்கா ஒரு பக்கம்..எனக்கும் அவளுக்கும் சின்னதா ஒரு ப்ராப்ளம் இளா...இல்லையே அத்தான் சின்ன விஷயத்துக்கெல்லாம் வீட்ட விட்டு கெளம்புர ஆள் இல்ல அவ. என்ன நடந்ததுன்னு கேட்டாலும் வாயை மூடிட்டிருக்கா என்னமோ அவ மனசை ரொம்ப பாதிச்சிருக்கு.

இப்போ வரவேணாம் அத்தான் நாளைக்கு காலைல வாங்க
அவளை காணுமேன்னு தேடுவீங்கன்னுதான் கால் பண்ணேன்.நீங்களும் சாப்டு தூங்குங்க குட் நைட்.

போனை வைத்துவிட்டு அவளும் சிவகாமியும் வலுக்கட்டாயமாய்  சாப்பிடவைத்து ரகுதேவனும் ருத்ராவும் சமாதானமாய் பேசி யசோ தூங்கிய பின்னே அவரவர் உறங்கச் சென்றனர்.

உடம்பு கழுவி நைட்டிக்கு மாறி இளா வந்த போது கட்டிலில் சாய்ந்து அமர்ந்தவாறு ருத்ரா டீவி பார்த்துக் கொண்டிருந்தான். காக்க காக்க படம் போய்க் கொண்டிருந்தது..அவளும் கட்டிலில் அமர்ந்து பார்க்க தொடங்கினாள்.

என்ன சொல்ல போகிறாய்..Tahanan ng mga kuwento. Tumuklas ngayon