உன் விழிகளில்
விழுந்தெழுந்து
வார்த்தை தழுவலில்
வழுக்கி வழுக்கி
உனக்குள்ளேயே..நான்!!அடியே ஆத்தா..நான் இன்னும் உலகத்துல பார்க்க வேண்டியது நிறையவே இருக்கு..கல்யாணம் கூட பண்ணிக்கலை..ராதா கெஞ்சும் தொனியில் பேச இப்போ எதுக்கு உன் சொந்த கதை சோக கதைல்லாம் என்கிட்ட சொல்லிட்டிருக்க..இளா கடுப்பானாள்.
ஆமாடி இதுவும் பேசுவ இன்னும் பேசுவ..சிவனேனு இருந்தவளை இப்டீ உச்சி வெயில்ல இழுத்துட்டு அலையறதுமில்லாம முன்னால வர்ர வண்டிலயெல்லாமே ஏத்தி என்னை கொல்ல பாக்கறீயே இது நியாயமா..இப்ப நீ மூடிட்டு வரலைனா உண்மையாவே அதுதான் இங்கே நடக்கும்...அதோடு வாயை இறுக மூடிக் கொண்டாள் ராதா.
இறால் பண்ணைக்கு அருகிலேயே அவனது அலுவலகமும் இருந்தது. அலுவலகத்தினுள் ஸ்கூட்டியை நுழைத்தவள் வேகமாய் செல்ல ராதா ஓட்டமும் நடையுமாய் பின் தொடர்ந்தாள். ஜஸ்ட் அ மினிட் மேம் ஹவ் கேன் ஐ ஹெல்ப் யூ..ரிஷப்னிஸ்ட்டின் மிழிற்றும் குரல் அவளின் வேகத்திற்கு தடை போட்டது. புதிதாய் வேலைக்கு சேர்ந்திருக்கிறாள் அதனால் இவளை தெரியவில்லை என்பதை யூகித்த இளா கேன் ஐ மீட் மிஸ்டர் ருத்ரா என்றாள். டூ யூ ஹாவ் அப்பொய்ன்ட்மென்ட் மேம்.. இவள் என் கடுப்பை கிளப்பறாள்டீ..பொறுமை பறக்க ராதாவிடம் ரகசியம் பேசினாள்
அப்போது அங்கே வந்த மானேஜர் வாங்க மேடம் ஸாரி நியூ ஜாய்னி என்றவர் இருவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தார்.ரிஷப்னிஸ்ட்டின் தயக்கமான சாரியை ஒரு தலையசைவில் ஏற்றுக் கொண்டவள் மானாஜரை பார்த்து நாராயணன்.. அத்தானை கொஞ்சம் பார்க்கனுமே என்றாள்.
சார் மீட்டிங்க்ல இருக்காங்க இப்போ முடியற நேரம்தான் அவசரம்னா போய் சொல்றேன் இல்லைனா பைவ் மினிட்ஸ் வெய்ட் பண்றீங்களா மேம் லஞ்சுக்கு வருவாங்க..ஓகே ஐல் வெய்ட்...உள்ள போய் சார்ட
கேபின்ல உட்காருங்க மேம்.
உள்ளே அவர்கள் நுழைய வாவ் செம்மயா இருக்குல்ல ரூம்..பளிங்கறை போல் சுத்தமாக அபீஸியலாய் இருந்த அறையை பார்த்து வியந்தாள் ராதா. அவனின் மேசையின் பின்னே அலட்சிய பார்வையும் லேசான சிரிப்புமாய் ருத்ராவின் படம் பெரிதாய் மாட்டியிருந்தது. செம்மையாதான் இருக்கு..அதை பார்த்தவாறே கூறினாள் இளா.
ESTÁS LEYENDO
என்ன சொல்ல போகிறாய்..
Romanceஹலோ பிரெண்ட்ஸ்..இது நான் உங்களோட Share பண்ணிக்கிற என் முதல் நாவல்...Love story தான் பட் என்னோட Style ல சொல்றதால புடிச்சாலும் புடிக்கல்லனாலும் சொல்லிடுங்கப்பா..கதை பத்தில்லாம் நான் சொல்லப்போறதில்ல அத நீங்களே படிங்க..But நாவல்ல 2 ஹீரோ ஹீரோயின்ஸ்..கட்...