உன் கேசம்
கலைத்து
விளையாடவே
காற்றோடு
அனுப்புகிறேன் என்
காதல் கிறுக்கல்களை..கொஞ்சம் காரம் தூக்கலாய் சூடாக இருந்த ஓட்ஸ் கஞ்சி தொண்டையில் இதமாக இறங்கியது. இத்தனைக்கும் அவளை சாப்பிட வைக்க எழில் அவ்வளவு கெஞ்சியிருந்தான்.
அரை மயக்கத்தில் இருந்த தன்னை தூக்கி வந்து கட்டிலில் கிடத்தி தண்ணீர் தர அதுகூட கசந்து வழிந்தது.. மறுப்பாய் தலையசைத்தவளை கட்டிலில் சாய்த்து விட்டு கிச்சனுக்கு சென்றவன் கையில் கஞ்சோடு வந்தான்...வேண்டாமென மறுத்தவளை கெஞ்சி சாப்பிட வைத்து தன் முகம் பார்த்து அமர்ந்திருக்கும் கணவனை பார்க்க பாவமாய் இருந்த போதும் அவள் அவனோடு ஒரு வார்த்தை கூட பேசவில்லை.காலியான பௌலை அவள் கீழே வைக்க க்ளாசில் தண்ணீர் ஊற்றி கொடுத்தான். வாங்கி குடித்துவிட்டு தாங்க்ஸ்..என்றாள். ஒன்றும் பேசாது சென்றவன் கையில் சிறிய பாக்கோடு வந்தான்..என்ன அது என்றவளிடம் ரெண்டு நாள் இங்கதான் தங்க போறேன்..உனக்கெதுக்கு வீண் சிரமம் மாமா வேற வெளியூர் போயிருக்காங்கனு அம்மா சொன்னா அத்தை தனியா இருப்பாங்க நீ கெளம்பு.
அத்தையும் அம்மாவும்தான் கோயிலுக்கு போறாங்க..சொல்லிலவிட்டு அவன் உடைமாற்ற எல்லாம் ப்ளான் பண்ணி பண்ட்ராங்களா..மனதுக்குள் எண்ணிக் கொண்டவள் வெளியே எதுவும் காட்டிக் கொள்ளவில்லை.ரிஸார்ட்டில் இளாவின் பொழுது ஸுப்பராய் போனது. ரகுதேவனின் செட்டோடு சேர்ந்து கொண்டு செஸ்..ஸ்க்ராபிள் விளையாட்டு வயதான பெண்களோடு கதை பேசுவது இளம் பெண்களோடு க்ரீம்,பெ(f)ஷன்,ஸ்டைல்..சினிமா போன்ற ட்ரென்ட் வளவளப்புக்கள்..சிறு பிள்ளைகளுடன் கொட்டமடித்தல் என ஒரு நாளுக்குள் மொத்த கம்பெனிக்கும் அவர்களது உறவினர்களுக்கும் இளா நெருக்கமாகிப் போனாள்.
எம் டி யின் வொய்ப்(f) என்று தயங்கியவர்கள் எல்லோரும் அவளின் தடையற்ற கலகலப்பான சுபாவத்திலும் மேடமா அடிங்க்..என்னை பார்த்தா அவ்ளோ வயசான மாதிரியா தெரியுது..என்ற மிரட்டலிலும் அவளோடு ஒன்றிப் போக கொஞ்ச நேரத்தில் இளா.. இளா.. என்ற அழைப்பே ரிஸார்ட் முழுக்க கேட்டது. ஆனால் என்ன அந்த ராகினியை பார்த்தால்தான் கொஞ்சம் கடுப்பாகிப் போனது.
பின்னே சும்மாவே அவளை பிடிக்காது இந்த அழகில் ருத்ரா சார்..
ருத்ரா சார்..என்று அலைபவளிடம் அவனும் சிரித்து சிரித்து பேசுவதும் பார்க்கவே கன்ட்ராவியாய் இருந்தது.
YOU ARE READING
என்ன சொல்ல போகிறாய்..
Romanceஹலோ பிரெண்ட்ஸ்..இது நான் உங்களோட Share பண்ணிக்கிற என் முதல் நாவல்...Love story தான் பட் என்னோட Style ல சொல்றதால புடிச்சாலும் புடிக்கல்லனாலும் சொல்லிடுங்கப்பா..கதை பத்தில்லாம் நான் சொல்லப்போறதில்ல அத நீங்களே படிங்க..But நாவல்ல 2 ஹீரோ ஹீரோயின்ஸ்..கட்...