உன் விரல் சேர்த்து
விளையாடி
விழியாலே கதை பேசி
தவிப்போடு முடி கோதும்
விடியாத இரவொன்று வேண்டும்..!உப்ப்ப்(ff)...துப்பட்டாவால் முகத்தை துடைத்துக் கொண்டாள்..என்னடீ வெயில் இப்டி கொழுத்துது..தேவையான நோட்ஸ்லாம் எடுத்தாச்சு..இனி கெளம்பலாமா பசிக்குது..இளா சொல்ல உனக்கு பசிக்கலைனாதான் அதிசயம் எனக்கு தாகமா இருக்கு என்றவாறு அந்த மரத்தடியில் இளாவின் அருகில் அமர்ந்தாள் ராதா.
ஹேய் அங்க பாரேன் நம்ம லவ் பேர்ட்ஸை ராதா காட்டிய திக்கில் பார்த்த இளா சிரித்தாள் அங்கு விக்கி தான் எடுத்த போட்டோஸை காட்டிக் கொண்டிருக்க மேகா ஆர்வமாய் பார்த்துக் கொண்டிருந்தாள்.என்னடி நம்ம நெருப்பு பனியாய் குளுந்துடிச்சி..மேகா சிரிப்புடன் விக்கியோடு அமர்ந்திருப்பதை பார்த்து இளா கேட்க அதை என்னன்னு சொல்றது எரிமலையே ஐஸ் கணக்காய் உருகுரப்போ ஜஸ்ட் மேகா நெருப்புதானே...ராதா ராகமாய் பேச என்னடீ உளர்ர..இளா புரியாது பார்த்தாள்.
ஆஹ் உளறலாதான் தெரியும்..கடிச்சு விளையாட்ரதும் அடிச்சு விளையாட்ரதும் மேல மேல உருண்..அவள் பேசி முடிக்க முன் அவள் வாயை தன் கைகளால் இறுக மூடியவள்..ஹேய்..
ஷ்ஷ்ஷ்ஷ்..உனக்கு எப்டி...அவள் கையை தட்டி விட்டு ஐயையோ தப்பா நினைச்சுக்காதேம்மா..மேகா தண்ணி குடிக்கனும் பயமாருக்கு வாடீ னு சொன்னாள் சரினு ரெண்டு பேரும் வந்தமா அப்போதான் உங்க ரொமான்ஸை பார்க்க வேண்டியதாப் போச்சு.கடைசியில் தண்ணியை குடிக்காமலே ஓடி வர்ர நிலமை..என்னடீ..நைட் எல்லாமே கதம்..ஆ அவள் கிசுகிசுக்க முகம் சிவக்க ச்சீ போடி அதெல்லாம் ஒன்னும் நடக்கலை..அடப்பாவமே கவலை படாதே அதெல்லாம் நடந்துடும்..மவளே உன்னை கொல்ல போறேன்டீ இளா ராதாவை சராமாரியாக அடிக்க அவள் சிரித்துக் கொண்டே கலாய்த்தாள்.
ஒரு வழியாய் எல்லாம் முடிந்து கிளம்ப தயாரானார்கள். பஸ்ஸில் செல்வதென ஏற்கனவே முடிவு செய்யப் பட்டதால் மரத்தடியில் பஸ்ஸுக்காக எல்லோரும் காத்திருந்தனர். ஹேய் இளா சட்டுன்னு பார்த்துடாத அங்க உன் மீச உன்னையேதான் பார்க்குது..ராதா கிசுகிசுக்க எதேர்ச்சையாய் திரும்புவது போல் பார்த்தவள்..அவனின் பார்வையில் சிவந்தாள். அவன் அவளையே பார்த்திருக்க இவளோ அடிக்கடி அவனை பார்ப்பதும் திரும்புவதுமாய் இருந்தாள்.
நடத்து நடத்து...ராதா கண் சிமிட்ட சிரிப்புடன் போடி என்றாள்.
YOU ARE READING
என்ன சொல்ல போகிறாய்..
Romanceஹலோ பிரெண்ட்ஸ்..இது நான் உங்களோட Share பண்ணிக்கிற என் முதல் நாவல்...Love story தான் பட் என்னோட Style ல சொல்றதால புடிச்சாலும் புடிக்கல்லனாலும் சொல்லிடுங்கப்பா..கதை பத்தில்லாம் நான் சொல்லப்போறதில்ல அத நீங்களே படிங்க..But நாவல்ல 2 ஹீரோ ஹீரோயின்ஸ்..கட்...