அத்தியாயம் -39

9.8K 306 33
                                    

நிழலின் சுகங்கள்
நிஜமாய் கோர்த்த
மழைச்சாரலாய்..
வண்ணங்கள் சேர்த்து
வாசனையாய் நீ தூறிக் கொண்டிருக்கிறாய்...என்னில்.

லேசாய் புரண்டு படுத்தவன் கையை துலாவி அவளை தேடினான்..தலையணை தட்டுப்படவே கண்களை திறந்த போது அவன் தனியே படுத்திருப்பது தெரிந்தது..ஈரமாய் கசங்கிய போர்வையை பார்த்தவன் குனிந்து தன்னை பார்த்தான்...சட்டென தூக்கம் முழுதாய் விலக அவசரமாய் எழுந்து அமர்ந்தவனுக்கு அவளை வம்பிழுத்தது...தண்ணீர் ஊற்றியது..ஷவறை திறந்தது..அதன் பின் பாத்ரூமில் நடந்தது...பின்...பின்பு நடந்த எல்லாம்..எல்லாமே நினைவில் வர அவன் இதழ்கள் தானாய் விரிய சிரித்துக் கொண்டான்..எங்கே போனாள்..எட்டிப் பார்த்த போது..பாத்ரூம் கதவு திறந்து கிடந்தது..கடிகாரத்தை பார்த்தால் இரண்டு முப்பதை தாண்டிக் கொண்டிருக்க.. இந்நேரத்தில் எங்கே போனாள்..எழுந்து டீ ஷர்ட்டை போட்டபடி அறையை விட்டு வெளியே வந்தான்.

நடுராத்திரியில் சத்தமாய் அழைக்கவும் முடியாது..நன்றாய் இருட்டியிருக்க ஒன்றிரண்டு விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன.வெளியே யாரின் நடமாட்டத்தையும் காணவில்லை..அவனுக்கு லேசாய் பயம் அப்பிக் கொண்டது.
அதுவரை இருந்த சுகமான மனநிலை மாறி கோபம் பரவ அவளை தேட ஆரம்பித்தான்.

வெளியே பௌர்ணமி நிலவு முழுதாய் காய்ந்து கொண்டிருக்க
குளிர் காற்று வீசிக் கொண்டிருந்தது..பூலின் அருகே இருந்த நீண்ட கதிரையில் தெரிந்த வரி வடிவம்...அது இளாதான்..மனசில் நிம்மதி பரவ அருகே சென்றான்..இந்த இருட்ல இங்கே வந்து என்ன பண்ட்ர..நிமிர்ந்து பார்த்தவளின் முகம் லேசாய் வீங்கி கண்கள் சிவந்து கன்னங்களில் கண்ணீர்தடம்..அவன் இதை எதிர்பார்க்கவில்லை..ஹேய்...
எ..என்ன..அழுதியா..அவள் எதுவும் பேசாது தழும்பும் தடாக நீரினை வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். ஹேய்..உன்னைதான் கேட்கறேன் இந்த இருட்ல இங்க வந்து உட்காந்துட்டு அழுதுட்டிருக்க..கொஞ்சம் என்னை பார்..எதுவுமே பேசாது எழுந்து அறை நோக்கி நடந்தவளை பார்த்து கோபம் மூண்டாலும் அவளின் அழுத தோற்றம் மனதை பிசைய அவளை பின் தொடர்ந்தான்.

என்ன சொல்ல போகிறாய்..Where stories live. Discover now