அத்தியாயம்-12

6.3K 248 5
                                    

இப்போதெல்லாம் என்
இதயம் கனத்துத்தானிருக்கிறது
நீ கால்மேல் காலிட்டு
கர்வமாய் அமர்ந்திருப்பதால்..

இது என்ன வம்பு என்ற பாவனையில் யசோ அமர்ந்திருக்க எழிலின் அம்மா ஏதோ முனகிக் கொண்டிருந்தார். வேண்டாத மருமக கை பட்டா குத்தம் கால் பட்டா குத்தம் என யசோவின் பாட்டி ஒரு பழமொழி சொல்வார் அதற்கான முழு அர்த்தத்தையும் அவள் அனுபவித்துக் கொண்டிருந்தாள்.

திருமணமாகி வந்ததிலிருந்து எழிலை அவள் மயக்கியதாக ஒவ்வொரு பேச்சிலும் குத்திக் கொண்டே இருந்தார் அவள் மாமியார். பொறுத்துப் போக அவள் எவ்வளவோ முயற்சி பண்ணியும் இன்று அவர் பேசியது அவளை பொறுமை இழக்கச் செய்தது.

அவளின் அம்மா சொல்லிக் கொடுத்து அவள் அவர் மகனை மயக்கியதாக கூற அவளால் தாங்க முடியவில்லை..எந்த பேச்சிற்கு பயந்து அவள் காதலையே மூடி மறைத்தாளோ அந்த வார்த்தைகளேயே கேட்கும்படி ஆனது இன்னும் கோபத்தை அதிகரிக்க யசோவும் எதிர்த்து பேசினாள்.

சும்மா நிறுத்துங்க அத்தை..மயக்கினேன் மயக்கினேன் என்றீங்களே என்னை கல்யாணம் பண்ணிக்கறியானு உங்க பையனாத்தான் வந்து கேட்டார்..அதுவும் எப்போனு மறந்துட்டீங்களா..உங்க பையனுக்கு நீங்க பார்த்து வெச்ச பணக்கார பொண்ணு எவன் கூடயோ போனப்றம்தான்..அவள் கோவமாய் மூச்சு வாங்க ஹேய்..என எழிலின் அம்மா ஏதோ ஆரம்பிக்க ஜஸ்ட் ஷட்ட்அப்..என்ற அதட்டலில் சட்டென இருவரும் திரும்பி வாசலை பார்க்க கோப விழிகளுடன் எழில் நின்றிருந்தான்.

அம்மா அவதான் இனிமேல் என் வாழ்க்கை முழுக்க கூடவே இருக்க போறவ..என் பொண்டாட்டி இனி ஒரு தரம் தப்பா பேசினீங்கனு என் காதுல விழுந்தா நாங்க தனியா போய்டறோம்..அம்மா அதிர்ந்து போய் பார்க்க அவன் யசோ பக்கமாய் திரும்பினான். மேல வா..வேகமாய் படியேறி அவன் அறைக்குச் செல்ல அவள் தயக்கமாய் தொடர்ந்தாள்.

அறைக்குள் அவள் நுழைந்த போது குளியலறையில் தண்ணீர் விழும் சத்தம். கட்டிலில் ஓரமாய் அமர்ந்தாள்..இவன் எப்போது வந்தான் கோபத்தில் நானும் கொஞ்சம் ஒரு மாதிரியாய் பேசிவிட்டேனோ..குளியலறைக்கதவு திறந்து வெளிவந்தவன் முகம் கடுகடுவென்றிருந்தது. வழமை போலில்லாமல் அவளிடமிருந்து கொஞ்சம் தள்ளியே அமர்ந்தவன் இதோ பார் அம்மாகிட்ட சொன்னதுதான் உனக்கும் நீதான் என் வாழ்க்கை முழுக்க கூடவே இருக்க போற என் பொண்டாட்டி..உனக்கு புடிக்குதோ இல்லையோ நான்தான் இனிமேல் உன் புருஷன்..மனசுல வெச்சுக்க.
அவளிடம் உறுமி விட்டு வேகமாய் நடந்து வெளியேறி விட்டான்.

யசோ பேசியதை அவன் தவறாக எடுத்துக் கொண்டான் என்பது புரிய கவலையாக இருந்தது. தங்களுக்கிடையே இருந்த சுமூக உறவை தானே கெடுத்ததை எண்ணி மனம் வருந்த கட்டிலில் சாய்ந்தமர்ந்தாள்.

ஐயோ அத்தான் நீங்க நினைக்கிற மாதிரி இல்ல..நான் அந்த அர்த்தத்துல சொல்லலை சும்மா ப(f)ன்னாதான்...அவள் பதட்டமாய் விளக்க முற்பட்ட இளாவை..கண்கள் இரண்டிலும் அனல் கொப்பளிக்க உஷ்ணமாய் பார்த்து போதும் நிறுத்து டாம்ன்..நான் உலகத்துலயே செஞ்ச பெரீய தப்பு உன்னை போய் கல்யாணம் பண்ணேன் பாரு அதான்..கர்ஜித்தான் ருத்ரா.

இல்லத்தான்..அவள் மறுபடி துவங்க பேசாதே வாயை திறந்தால் பொய்..பேசுற எல்லாமே பொய் ராதாவை பொண்ணு பார்க்க வர்ரதா சொல்லிட்டு போன..கடைசில என்னை முழு முட்டாளாக்கிருக்க.ஊரெல்லாம் உன்னை நான் கொடுமை படுத்தறதா சொல்லிட்டு அலையுற..கொடுமைனா என்னனு தெரியுமாடீ உனக்கு.. எட்டி அவள் கை பிடித்து பின்புறமாக வளைத்து அழுத்த வலியில் பற்களை அழுந்த கடித்தவள் தாங்க முடியாமல் அ..அ..த்த்தா..ன் ப்ளீ..ஸ் கைய் வலிக்க்க்...குது என முனக சட்டென அவன் அவள் கையை விட கன்றிப் போன கரங்களை தடவியவளின் கண்களில் நீர்த்துளிகள் கோர்த்தன.

நீதாண்டி..எனக்குள்ள இருக்கற மிருகத்தை சீண்டிப்பாக்கற..இதோ பார் இன்னையோட நமக்குள்ள எந்த உறவுமில்லை..எங்க வேணுமோ போ..யாரோட வேணூம்னாலும் சுற்று..ஐ டோன்ட் கேர்..நெவர் மைன்ட் எபௌட் யூ. உன்னை பொறுத்த வரை உன் கழுத்துல நான் கட்டிருக்கறது தாலி இல்லை விலங்கு. என்னை பொறுத்தவரை எங்கப்பாவுக்காக நான் பண்ண பெரிய தப்பு அது. வெளி உலகத்துல நாம புருஷன் பொண்டாட்டி பட் இந்த ரூம்ல நீ யாரோ நான் யாரோ..உன்னை பார்க்கவே எரிச்சலாருக்கு..கதவை அறைந்து சாற்றி வெளீயேறினான் அவன்.

இது இவ்வளவு பெரிய பிரச்சனையாகுமென எண்ணாத இளமதியோ விக்கித்துப் போனாள். அவளின் கை வலியெடுக்க அவன் வார்த்தைகள் அதனிலும் வலித்து.
அப்படியே சரிந்தமர்ந்து முழங்கால்களுக்கிடையில் முகம் புதைத்து அழத் தொடங்கினாள்.

இங்கோ கையில் திருமண படத்தை வைத்துக் கொண்டு அதில் கள்ளமில்லாமல் புன்னகைத்திருக்கும் எழிலையே பார்த்திருந்தாள் யசோ.
அவன் உதடுகளில் அவள் கண்ணீர் துளி விழுந்து தெறித்தது.

Near, far, wherever you are
I believe that the heart does
go on..
Once more you open the door
And you're here in my heart
And my heart will go on and on..

இளா அடிக்கடி பாடும் டைடானிக் வரிகள் யசோவிற்கு நினைவு வர அழுகையூடே நீ என்னை விட்டு தூரமா போக முடியாது எழில்  ஏன்னா you're here in my heart..நெஞ்சில் கைவைத்து கொண்டே சொன்னாள் அவள்.

என்ன சொல்ல போகிறாய்..Donde viven las historias. Descúbrelo ahora