காதல் 42

4K 198 114
                                    



💕💕தன் மீது போதையில் மயங்கி சரிந்த ஜீவனை தன் வீட்டிற்கு அழைத்து சென்ற அவன் நண்பன்,அவன் அருகிலேயே உறங்கிப் போனான்...

விடியற்காலை தூக்கம் கலைந்த ஜீவன் தன் கைப்பேசியை தேடி எடுக்க அதில் ஐம்பதிற்கும் அதிகமாக மிஸ்ட் கால்களும்,குறுஞ்செய்திகளும் சாதனாவிடம் இருந்து வந்திருக்க "ஷிட்" என தலையில் அடித்துக் கொண்டவன் பைக் சாவியை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு புறப்பட்டான்.....

வாசலில் அழைப்பு மணியை அடித்து காத்திருந்தவனை அறை தூக்கத்துடன் கதவை திறந்த சாதனா முறைக்க அவளை பார்த்து இளித்து வைத்தவன் ஏதும் பேசாமல் அறையினுள் நுழைய,அவன் பின்னே சென்றவள்...

நைட் வர முடியாதுனு கால் பண்ணி கூட சொல்ல முடியலல??ஏதோ மெசெஜ்ல இன்ஃபாம் பண்ற!!!!எனக் கேட்க

கொஞ்சம் பிஸி சாது!!என்றவனின் கண்கள் சிவந்திருப்பதை பார்த்தவள் "ட்ரிங் பண்ணியா" என கேள்வியில் துவங்கி ஆமா ட்ரிங் பண்ணிருக்க!!!என அவளே பதிலையும் சொல்ல மறுப்பேதும் கூறாமல் இருந்தவனை முறைத்தவள் "நான் இப்போவே அத்தைகிட்ட சொல்ற இரு" என்றவாறு கதவை நோக்கி சென்றவளை வழிமறித்தவன் "விளையாடாத சாது" என்றான்...

நான் ஏதும் விளையாடல, இங்க இருந்தே  கூப்பிட முடியாதா??..அத்தை...அத்தை எனக் கத்தியவளை கதவில் சாய்த்து வாயை முடியவன் "அம்மாக்கு தெரிஞ்ச அவ்வளோதாடி ப்ளீஸ் சும்மா இரு" என்றவாறு அவன் கைகளை விலக்க அந்த நொடிக்காக காத்திருந்ததுப் போல்  அவள் மீண்டும் கூச்சலிட என்ன செய்வது என யோசிக்க முடியாமல் அவளை கதவோடு சேர்த்து அழுத்தியவன் அவள் இதழோடு இதழ் பதித்திருக்க இருவரும் தன் நிலை மறந்தனர்....

கண்கள் மூடி நடப்பதை இனிமையாக அனுபவிப்பவளை பார்த்தவன் மீண்டும் அவள் இதழில் முழு கவனம் செலுத்த மூச்சறைக்க இருவரும் விலகினர்....

முத்தத்தினாலே தன் முழு கட்டுப்பாடையும் இழந்திருந்த ஜீவனுக்கு சாதனாவின் கண்களில் தெரியும் மயக்கம் இன்னும் அதிகமாக தைரியத்தை கொடுக்க அவள் முகத்தை கையில் ஏந்தி கன்னம்,தாடை என முத்த மழை பொழிய துவங்கியவன் சற்று முன்னேறி தோள்பட்டையில் இருக்கும் அவளது இரவு உடையின் சட்டையை விலக்கி் அங்கு இதழ் பதிக்க உடல் சிலிர்க்க அவன் சட்டையின் காலரை பற்றிக் கொண்டாள்....

நீயே காதல் என்பேன் !!!(completed√)Where stories live. Discover now