💕💕💕💕டேய் விடியற்காலைலயே பால் குடி,மெடிடேஷன் பண்ணுனு கொல்லாதடா....ஹிட்லர்!!ஹிட்லர் என சாதனா மீண்டும் போர்வையை எடுத்து முகத்தை மறைத்துக் கொண்டாள்......
சாதுமா டைம் ஏழறை ஆகுது!!எம்டி ஸ்டொமக்கோட ரொம்ப நேரம் இருக்கக்கூடாது,ப்ளீஸ் எழுத்துடுடா என கெஞ்சியவனை தூக்கக் கலக்கத்தோடு பார்த்தவள் போற்றியிருந்த போர்வையை சுற்றி அவன் முகத்தில் தூக்கி எறிந்தாள்...
அதை லாவகமாக பிடித்தவன் அவளை நிமிர்ந்து பார்க்க...கர்ப்பக்காலத்தில் பெண்களுக்கே உரிய பொலிவுடன் ஒரு கையில் வயிற்றை தாங்கியபடி குளியலறைக்குள் நுழைந்தவளை ரசனையுடன் பாரத்துக் கொண்டவன் அவளுக்காக பால் காய்ச்ச சமையலறைக்கு சென்றான்.......
பால் கப்போடு வந்தவன் டைனிங் டேபிளில் தலைசாய்த்து மீண்டும் உறங்கிக் கொண்டிருந்தவளிடம் சென்று தன் கையில் இருந்த கப்பில் இருந்து இரண்டு சொட்டு பால் எடுத்து அவள் கையில் விட....ஆ!!!என்ற அலறலோடு எழுந்தவள் அவனை துரத்தினான்....
அவளிடம் இருந்து நழுவி சோபாவின் மீது எகிறி குதித்து ஓடியவனை மூச்சிறைக்க வேக நடையுடன் துரத்தியவளிடம் பழிப்புக் காட்டியவன் ஓ மை க்யூட்டி ப்ளம் கேக்!!!ஹப்பிய பிடிக்க முடியாதுனு தெரிஞ்சும் துரத்துர பாரு,உன் கான்பிடென்ஸ பாராட்டியே ஆகனும்டி என அவன் அவளை சீண்ட
கண்களை சுருக்கி அவனை முறைத்தவள்,திடீரென இரண்டு கைகளாலும் வயிற்றை பற்றியவள் முகத்தில் வலியுடன் ஆஆவென கூச்சலிட ஜீவன் பதற்றத்தோடு அவளை நெருங்கினான்....
வலிக்குதாடா ரொம்ப??நான் ஆப்பூலன்ஸுக்கு கால் பண்ணவா??என்றவனின் காதை பிடித்து திருகியவள் மாட்டுனியா!!!!எனச் சிரிக்க
அவள் கையை உதறியவன்....இது விளையாடுற டாபிக் இல்ல சாது👿👿என அங்குள்ள சோபாவில் சென்று அமர்ந்தான்....
டைனிங் டேபிளில் அவன் வைத்த பால் கப்பை கையில் எடுத்தவள் அவனிடம் நெருங்கியவள் அவன் மடியில் இருந்த கைகளை விலக்கி அவன் மடியில் அமர்ந்தவள்,மீண்டும் அவன் கைகளை எடுத்து தன்னை சுற்றி அணைத்துக் கொண்டவள்....சீ பேபி!!டேடி நம்ப மேலே கோபமா இருக்காரு,என்ன பண்ணலாம்???என குழந்தையிடம் கேள்வியெழுப்பினும் ஓரக்கண்ணால் ஜீவன் உதடை சுழிப்பதை கவனித்தபடிதான் இருந்தாள்....
KAMU SEDANG MEMBACA
நீயே காதல் என்பேன் !!!(completed√)
NonfiksiHighest ranking - 2 in nonfiction 1 in tamilstory மூன்று உயிர் தோழிகளான மாதவி, சாதனா மற்றும் அனுஷியாவின் நட்பின் ஆழத்தையும்....அவர்களின் வாழ்வில் இடம்பெறும் காதல், திருமணம், ஊடல் என்று அனைத்தையும் பேசப் போவதே " நீயே கா...