தண்டனை

43 13 18
                                    

*" # அல்லாஹ்வின்_தண்
டனை_இரண்டுவகை "*
.
*மாணவர் ஒருவர் தன்னுடைய ஆசிரியரிடம் நாம் எவ்வளவோ பாவம் செய்கிறோம், ஆனால் அல்லாஹ் நம்மை தண்டிப்பதில்லையே? என்றார்.*
.
*அதற்கு ஆசிரியர் சொன்னார் : அல்லாஹ் உன்னை பல்வேறு வகையில் தண்டிக்கிறான் ஆனால், அதை நீ உணர்ந்து கொள்வதில்லை.*
.
*அல்லாஹ்விடம நெஞ்சுருக உரையாடுகின்ற இனிமையான அந்த உணர்வை உன்னிடமிருந்து அவன் பறித்துக் கொள்ளவில்லையா?*
*அல்லாஹ்வின் முன் கதறி அழமுடியாத இறுகிய உள்ளத்தை விட வேறு எந்த பெரிய பாவத்தாலும் அல்லாஹ் சோதிப்பதில்லை.*
.
*குர்ஆனின் ஒரு பக்கத்தை கூட ஓதாமல் உன்னுடைய நாட்கள் ஓடுவதில்லையா?*
.
*இந்த குர்ஆனை ஒரு மலையின் மீது இறக்கினால் அது நடுநடுங்கி அல்லாஹ்வின் அச்சத்தால் சுக்கு நூறாகி சிதறி விடும் என்ற அல்லாஹ்வின் வசனத்தை சில நேரம் நீ கேட்டிருப்பாய்.*
.
*அந்த வசனத்தை செவி மெடுக்காததை போன்று எந்த பாதிப்பும் இல்லாமல நீ் சென்று கொண்டிருப்பதில்லையா?*
.
*நீண்ட இரவுகள் உன்னை கடந்து செல்கின்றன. அதில் சிறிது நேரம் கூட நின்று தொழாமல் நீ தடுக்கப்பட்டுவிடவில்லையா?*
.
*ரமலான், ஷவ்வாலின் ஆறு நாட்கள், துல்ஹஜ்ஜின் பத்து நாட்கள் என நல்ல காலங்கள் உன்னை கடந்து செல்கின்றன. அவைகளை அவன் விரும்புகின்ற விதத்தில் நீ பயன்படுத்துகின்ற தவ்ஃபீக் உனக்கு கிடைக்காமல் போய் விட்டதை உணரவில்லையா?*
.
*இதை விட பெரிய தண்டனை என்ன இருக்கிறது??*
.
*வணக்க வழிபாடுகள் உனக்கு கடினமாக தோன்றவில்லையா??*
.
*அல்லாஹ்வுடைய திக்ரை விட்டும் உன்னுடைய நாவு தடுக்கப்படவில்ல
ையா??*
.
*மன இச்சைகளுக்கும் ஆசைகளுக்கும் முன்னால் நீ பலகீனமாகுவதை உன்னால் உணரமுடியவில்லையா??*
.
*பொருள், பதவி, பிரபல்யம் ஆகவேண்டும் என்ற பேராசைகளால் நீ சோதிக்கப்படவில்லையா??*
.
*இதை விட பெரிய தண்டனை என்ன இருக்கிறது??*
.
*புறம் பேசுதல், கோள் மூட்டுதல், பொய் சொல்லுதல் போன்ற பாவங்கள் புரிவது உன் மீது லேசாக ஆக்கப்படவில்லையா??*
.
*மறுமையை மறக்கடித்து இந்த உலக வாழ்கையை உன்னுடைய பெரிய கவலையாக ஆக்கப்படவில்லையா??*
.
*இதெல்லாம் அல்லாஹ்வின் தண்டனையில்லாமல் வேறென்ன??*
*என்னருமை மகனே! எச்சரிக்கையாய் இரு..*
.
*அல்லாஹ் கொடுத்த தண்டனையில் மிக இலகுவானது*

*பொருட்செல்வத்தி
லும் மக்கள்செல்வத்திலும் உனக்கு ஏற்படும் நட்டத்தில் எதை நீ தண்டணையாக உணர்கிறாயோ அவைகள்தான்*
.
*அல்லாஹ்வின் தண்டனைகளிலே மிக மோசமானது உள்ளத்தால் உணரப்படாமல் இருப்பது தான்..*
.
*யா அல்லாஹ்,*
.
*உன் கருணையின் மீது நம்பிக்கை வைத்துக் கேட்கின்றோம்,*
.
*உன்னை நினைவு கூறாது செலவு செய்த ஒவ்வொரு நொடிக்காகவும் எங்களை மன்னிப்பாயாக..*
.
*எங்கள் உள்ளங்களில் ஈமானை பலப்படுத்துவாயாக, முஃமினாக எங்களை மரணிக்கச் செய்வாயாக*.

அழகிய செயல்Where stories live. Discover now