🌍 *பெண்தேட பெருமானாரின் யோசனை*🌍
*''உலகமனைத்தும் ஒரு இடைக்கால இன்பமே அதில் மிகச்சிறந்தது சீரான பெண்ணே"*
(அல்ஹதீஸ்)
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு)அவர்கள்ஆம்! பெண்களால் இவ்வுலகம் அடையும் பயன்களும், அனுகூலங்களும் என்றென்றும் நிலைத்திருப்பவை ஏனெனில் மார்க்கப்பற்றுள்ள-சீரான பெண்களால் வளர்க்கப்படும் குழந்தைகள், மற்றும் அவர்களது சந்ததிகள் சீரான முறையில் அமையும்போது அதைவிட நீடித்த இன்பம் வேறு எதுவாக இருக்க முடியும்?
இதுபோன்ற ஒரு பெண்மணி தான் மறுமைக்கான ஆயத்தப் பணிகளில் கணவனுக்கு உடந்தையாக இருப்பாள். ஈருலகபாக்கியங்களுக்கும் காரணப்பொருளாக விளங்குவாள். எனவே தான் *''சீரான பெண்ணே மனிதனின் மேலான பொக்கிஷம்"* என இறைத்தூதர் இயம்பினார்கள்.
இதனால் தான் அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்,
'இறைவா... ஈருலகிலும் எங்களுக்கு நன்மையைத்தர நரக வேதனையிலிருந்து விடுதலை
யைத் தா" (2:201)என்ற இறைவசனத்திற்குப்பொருள் தரும்போது "இறைவா! இவ்வுலகில் (சீரான பெண் மூலம்) எங்களுக்கு நன்மையைத் தா, மறு உலகில் (''ஹருல்ஈன்" என்ற சுவர்க்கத்துக் கண்ணிகள் மூலம்) எங்களுக்கு நன்மையைத் தா, (கொடிய நாவு கொண்ட மனைவியின்) நரக வேதனையிலிருந்து விடுதலையைத் தா” என்று விளக்கம் தருவார்கள்.
"ஒரு பெண் நான்கு காரணங்களுக்காக மணம் முடிக்கப்படுகிறாள்.
(1) *செல்வம்*
(2) *அழகு*
(3) *குலகெளரவம்*
(4) *மார்க்கப்பற்று எனினும் மார்க்கப்பற்றுள்ள பெண்ணையே நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்".*
அல்ஹதீஸ். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலியல்லாஹு அன்ஹு)
நூல்: புகாரி முஸ்லிம்இந்த ஹதீஸிலும் மார்க்கப்பற்றுக்கே முதலிடம் தரப்பட்டுள்ளது பொதுவாகவே செல்வம் படைத்தவளுக்கு தன் செல்வத்தின் மீது, அழகிகளுக்கு தன் அழகின் மீது, குல கெளரவம் கொண்டவளுக்கு தன் குலத்தின் மீது பெருமையும், மமதையும் இருக்கும், இதனால் குடும்ப வாழ்க்கை சீரழிந்து, மன நிம்மதி எடு பட்டுப் போகும் என்பதே உலக அனுபவம். மார்க்கப் பற்றுள்ள பெண் ஒருத்தியால் தான், அல்லாஹ்வை பயந்து, கணவனின் உரிமைகளை மதித்து, அவனுக்குமன ஆறு தலையும், நிம்மதியையும் அளிக்கமுடியும் என்ற அடிப்படையில் அவளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
YOU ARE READING
அழகிய செயல்
Non-Fictionவாழ்க்கைக்கு தேவையான பல தேவைகளை அழகான முறையில் செய்யும் அழகிய செயல்😍😍 இதில் இருக்கும் 75% பதிவு copy paste😄😃