தவ்பா

49 15 26
                                    

தவறு செய்யனுமா. ? தாராளமாக!

ஆனால்....? ஒரு நிபந்தனை...!!!

பல்கு நாட்டுப் பேரரசராக இருந்து முடி துறந்த இறை ஞானி இப்றாஹீம் பின் அத்ஹம் (ரஹ் (இறையன்பிற்கு பாத்திரப்பட்டவர்கள்)) அவர்களிடம் வழிகெட்ட ஒரு இளைஞன் வந்து,நான் வரம்பு மீறி நடந்துவிட்டேன்.பல பாவச் செயல்கள் புரிந்து விட்டேன் அதற்காக இப்போது மனம் வருந்துகிறேன். ஆனால் பாவத்தை விட்டும் விலகி வாழ வழி தெரியாமல் வகையற்று உங்கள் முன் வந்து நிற்கிறேன்.நான் திருந்தி வாழ வழி சொல்லுங்கள் எனக்கேட்டு நின்றார்...

அதற்கு ஞானி மகான் அருளிய உபதேசம் இதோ.நீ ஐந்து காரியம் செய்ய சக்தி பெற்றிருந்தால்,தாராளமாக நீ தவறு செய்யலாம்.முதலாவது '' நீ அல்லாஹ்விற்கு மாறு செய்ய நாடினால் அவனது ரிஸ்க் (உணவு) எதையும் சாப்பிடாதே!'' இதைக்கேட்டு ஆச்சரியமடைந்த அவ்வாலிபன், '' அது எப்படி முடியும்? எது சாப்பிட்டாலும் அது அவனுடைய ரிஸ்க் (உணவு)தானே! அப்படியானால் அவனுடைய உணவையும் உண்டு விட்டு அவனுக்கே மாறு செய்வது உனக்கு நியாயமா? உண்ட வீட்டுக்கு இது இரண்டகமல்லவா? ''

ஆம்!  நியாயமில்லைதான்.இரண்டாவது உபதேசத்தைக் கூறுங்கள்''.

'' நீ அல்லாஹ்விற்கு மாறு செய்ய நாடினால் அவனுடைய எந்த நாட்டிலும் -- இடத்திலும் தங்காதே! அவனுடைய நாட்டை -- இடத்தை விட்டும் முதலில் வெளியேறிவிடு.

'' முன்பை விட இப்போது அதிர்ச்சி அடைந்த அவ்வாலிபன்,எங்கு இருந்தாலும்,சென்றாலும்,எல்லாம் அவனுடைய நாடாக -- இடமாக இருக்க,இது எப்படி சாத்தியமாகும்?.

என்னப்பா! அப்படியென்றால் அவனுடைய நாட்டில் - இடத்தில் இருந்து கொண்டே அவனுக்கு எதிராக பாவம் செய்யப் போகிறாயா? ''

இல்லை.இல்லை செய்யமாட்டேன் செய்யவும் கூடாது,'' சரி சரி மூன்றாவது உபதேசம் சொல்லுங்கள்.

நீ அல்லாஹ்வுக்கு மாறு செய்ய எண்ணினால் அவனுக்குத் தெரியாமல்,அவன் பார்க்காத இடமாகப் பார்த்து அங்கு போய் பாவம் செய்! '' 

அழகிய செயல்Where stories live. Discover now