உங்களின் எண்ணத்திர்க்கான பதில்

57 13 16
                                    

இது அவ்வளவு அழகு...

நீங்கள் சொல்வது: *நான் ஒரு தோல்வியடைந்தவன்...*
அல்லாஹ் கூறுகிறான்: *ஈமான் கொண்டவர்கள் வெற்றியாளர்கள்* (சூரா அல் Mu'minoon: 1)

நீங்கள் சொல்கிறீர்கள்: *அது மிகவும் கடினமானது ( சிரமமானது).*
அல்லாஹ் கூறுகிறான்: *சிரமத்துடன் தான் எளிதானதும் உள்ளது*
(சூரா Inshiraah: 6)

நீங்கள் சொல்வது: *யாரும் எனக்கு உதவியில்லை...*
அல்லாஹ் கூறுகிறான்: *நம்பிக்கை கொண்டோருக்கு உதவுவது நம் மீது கடமையாக ஆகி விட்டது.*
(சூரா அர-ரம்: 47)

நீங்கள் சொல்கிறீர்கள்: *என்னுடன் யாரும் இல்லை...*
அல்லாஹ் கூறுகிறான்: *அஞ்சாதீர்கள்! நான் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் உங்களுடன் இருக்கிறேன்.*
(சூரா தாஹா: 46)

நீங்கள் சொல்வது: *நான் மிகவும் (பாவி) பாவம் செய்தவனாகிவிட்டேன்...*
அல்லாஹ் கூறுகிறான்: *பாவத்திலிருந்து திருந்திக் கொள்வோரை அல்லாஹ் விரும்புகிறான்*. தூய்மையாக இருப்போரையும் விரும்புகிறான்
(சூரா அல் Baqarah: 222)

நீங்கள் சொல்வது: *இஸ்லாம் மிகவும் கடினமாக உள்ளது...*
அல்லாஹ் கூறுகிறான்: *அல்லாஹ் உங்களுக்கு எளிதானதையே நாடுகிறான். சிரமமானதை உங்களுக்கு நாடமாட்டான்.*
(சூரா அல் Baqarah: 185)

நீங்கள் சொல்வது: *என்னிடம் அதிகம் இல்லை...*
அல்லாஹ் கூறுகிறான்: *நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோருக்கு மன்னிப்பும், மரியாதையான உணவும் உண்டு.*
(சூரா அல்-ஹஜ்: 50)

நீங்கள் கூறுகிறீர்கள்: *நான் எப்போதும் நோயுற்றிருக்கிறேன்..*.
அல்லாஹ் கூறுகிறான்: *நம்பிக்கை கொண்டோருக்கு அருளாகவும், நோய் நிவாரணமாகவும் இருப்பதைக் குர்ஆனில் இறக்குகிறோம்.*
(சூரா அல் Israa: 82)

நீங்கள் சொல்வது: *நான் (மட்டும் தான்) அதிக சுமையை சுமந்து கொண்டு இருக்கிறேன்...*
அல்லாஹ் கூறுகிறான்: *எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்*.(சூரா அல் Baqarah: 286)

நீங்கள் சொல்வது: *நான் என்னை இழந்ததாக உணர்கிறேன்...*
அல்லாஹ் கூறுகின்றான்: *இழந்ததாக உள்ள உம்மை வழி அறியாதவராகக் கண்டு வழிகாட்டினான்*
(சூரா-Duhaa: 7)

நீங்கள் சொல்வது: *நான் மிகவும் பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்கிறேன்...*
அல்லாஹ் கூறுகிறான்: *மனிதனை அழகிய வடிவில் படைத்தோம்*
(அத்-தீன் சூரா: 4)

நீங்கள் சொல்கிறீர்கள்: *நான் வெகுமதி மற்றும் பாராட்டப்படாதவனாக உணர்கிறேன்...*
அல்லாஹ் கூறுகிறான்: *இதுவே உங்களுக்குரிய வெகுமதி (கூலி). உங்கள் உழைப்புக்கு நன்றி செலுத்தப்படும்*

நீங்கள் சொல்வது: *நான் அவமதிக்கப்பட்டதாக உணர்கிறேன்...*
அல்லாஹ் கூறுகிறான்:  **ஆதமுடைய மக்களை மேன்மைப்படுத்தினோம். அவர்களைத் தரையிலும், கடலிலும் சுமந்து செல்ல வைத்தோம். **தூய்மையானவற்றை அவர்களுக்கு வழங்கினோம். நாம் படைத்த அதிகமான படைப்புகளை விட அவர்களைச் சிறப்பித்தோம்.
பனு இஷ்ராயில் சூரா.70)

நீங்கள் சொல்வது: *தீயசக்தியாகிய ஷைத்தானின் சூழ்ச்சி மிகவும் பலமாக உள்ளது ...*
அல்லாஹ் கூறுகிறான்:  *ஷைத்தானின் சூழ்ச்சி பலவீனமானதாக உள்ளது.*
(சூரா al-Nisaa:.76)

நீங்கள் சொல்கிறீர்கள்: **வெற்றி என்பது வெகுதூரத்தில் உள்ளது...*
அல்லாஹ் கூறுகிறான்: * *அல்லாஹ்வின் உதவி அருகிலேயே உள்ளது *
(சூரா அல்-Baqarah: 214)

அல்லாஹ் தூய்மையானவன்... குர்ஆன் உங்கள் தேவைகள் மற்றும் அனைத்து செயல்களைக்குமான ஒரு புத்தகம். ♥

அழகிய செயல்Where stories live. Discover now