ஒரு ஊரில் ஒரு முஸ்லீம் செல்வந்தர் இருந்தார்.
அவர் நல்ல அறிஞரும் கூட,
தனக்கு மரணம் நெருங்குவதாக
உணர்ந்தார்.தன் மகனை அருகாமையில்
அழைத்தார்.
மரண சாசனம் போல் ஒன்றைச் சொன்னார் :என்
அருமை மகனே, விரைவில் நான் உங்கள்
அனைவரையும் விட்டுப் பிரிந்து விடுவேன்.
என் உடலைக்
குளிப்பாட்டி சடலத்துணி சுற்றுவீர்கள்.அப்போது என்னுடைய
ஒரேயொரு வேண்டுகோளை நீ நிறைவேற்றுவாயா?”
என்று கேட்டார்.என்னவென்று சொல்லுங்கள் தந்தையே என்றான்
மகன். அறிஞர் கூறினார் : என் சடலம் அதற்குரிய
துணியால் சுற்றப்படும் போது, என்னுடைய
பழைய காலுறைகளில் ஒன்றை என் கால்களில்
அணிவித்துவிடு.இதுதான் என் எளிய
கோரிக்கை” என்றார். ஊரில் மிகப் பெரும்
செல்வந்தர் தன் தந்தை. ஆனால், என்ன
இது விசித்திரமான
கோரிக்கை என்று நினைத்துக் கொண்டாலும்,
எளிய ஒன்று தானே என்று மகனும் ஒப்புக்
கொண்டான்.அதற்கடுத்த சில நாள்களில் அந்த முதியவர், தன்
சொத்துகளையும், மனைவி மக்களையும்
விட்டு விட்டு மௌத்தாகி போனார்.அவரை உலகிலிருந்து விடைகொடுத்து அனுப்ப
உறவினர்களும் நண்பர்களும் குழுமிவிட்டனர்.உடல் குளிப்பாட்டப்பட்டது. பிரேத ஆடை உடலில்
சுற்றப்படும் நேரம் நெருங்கியது.அப்போது மகனுக்கு தந்தையின் வேண்டுகோள்
நினைவுக்கு வந்தது.மெல்ல எழுந்து, குளிப்பாட்டியவரிடம்
சென்று தந்தையின் ஒரு காலுறையைக்
கொடுத்து “இதனை என் தந்தையின் கால்களில்
அணிவியுங்கள்; இதுவே அவரின்
இறுதி விருப்பமாகும் என்று கூறினான்.முடியாது,
முடியவே முடியாது என்று மறுத்தார்
குளிப்பாட்டும் பணியாளர்.இல்லை, இது என்
தந்தையின் ஆசை, நீங்கள் செய்துதான்
ஆகவேண்டும் என்று சொல்லிப் பார்த்தான்.ஆனால்
அவர் அசைந்து கொடுப்பதாக இல்லை.
இஸ்லாத்தில் இதற்கு இடமேயில்லை,
எனவே வாய்ப்பில்லை என்றார் உறுதியாக…
CZYTASZ
அழகிய செயல்
Literatura Faktuவாழ்க்கைக்கு தேவையான பல தேவைகளை அழகான முறையில் செய்யும் அழகிய செயல்😍😍 இதில் இருக்கும் 75% பதிவு copy paste😄😃